- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது விடாமுயற்சி ரிலீசுக்கும் குட் பேட் அக்லி வெளியீட்டிற்கும் இடையே இவ்வளவு சின்ன கேப் தானா......

என்னது விடாமுயற்சி ரிலீசுக்கும் குட் பேட் அக்லி வெளியீட்டிற்கும் இடையே இவ்வளவு சின்ன கேப் தானா… இத்தனை நாட்கள் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு அசத்தல் ட்ரீட்தான் போங்க…

- Advertisement -

அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. வினோத் இயக்கியிருந்த இந்த திரைப்படம், கமர்சியலாக எடுக்கப்பட்டது. ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றது. விஜயின் வாரிசு திரைப்படத்துடன் துணிவு திரைப்படம் போட்டி போட்ட சூழலில், வசூல் ரீதியாக இரண்டு படங்களும் கவனம் பெற்றன.

 

- Advertisement -

இந்த திரைப்படத்திற்கு பிறகு விஜய், லியோ மற்றும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ஆகிய திரைப்படங்களில் நடித்து அதை ரிலீசும் செய்துவிட்டார். தற்போது அவர் தனது கடைசி திரைப்படத்தில் வினோத்துடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார். ஆனால் அஜித்திற்கு இன்னும் எந்த திரைப்படங்களும் வெளியாகவே இல்லை. முதலாவதாக அவர் விடாமுயற்சி திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினார்.

 

- Advertisement -

அஜர்பைஜான் நாட்டில் இதற்கான படப்பிடிப்பு நடத்தப்பட்டது. மகிழ் திருமேனி இதனை இயக்கியிருக்கிறார். திரிஷா அர்ஜுன் ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் புத்தாண்டு பிறக்கும் சில மணி நேரங்களுக்கு முன்பாக, விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்தது லைக்கா நிறுவனம்.

 

இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனைப் புத்தாண்டு தான் சொல்ல வேண்டுமா வேறு நாட்களே கிடைக்கவில்லையா என்றும் சலித்துக் கொண்டனர். இது இப்படி இருக்க, அஜித் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இது முதலில், பொங்கலுக்கு வெளியாகும் என்றுதான் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால் விடா முயற்சி அன்று தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டதால், பொங்கல் ரேசில் இருந்து பின் வாங்கியது குட் பேட் அக்லி. மேலும் தனக்கான பணிகளிலும் படக்குழுவினர் மெதுவாக செயல்பட ஆரம்பித்தனர். இதனை கேங்ஸ்டர் திரைப்படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படியான சூழலில், குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க, விடாமுயற்சி திரைப்படமும் ஜனவரி மாதம் இறுதி அல்லது பிப்ரவரியில் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் விடாமுயற்சி வெளியான அடுத்த இரண்டு மாதங்களிலேயே குட் பேட் அக்லி திரைக்கு வருகிறது. ஏற்கனவே இதற்கு முன்னதாக, 2013 ஆம் ஆண்டு ஆரம்பம் திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. அடுத்த ஆண்டு அதாவது 2014 இல் பொங்கலுக்கு வீரம் திரைப்படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்