- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித்தின் திரையுலக கேரியரிலேயே மிக மோசமான படமாக அமைந்துவிட்டதா விடாமுயற்சி... உண்மையிலேயே இத்தனை கோடிகள் மட்டும்தான்...

அஜித்தின் திரையுலக கேரியரிலேயே மிக மோசமான படமாக அமைந்துவிட்டதா விடாமுயற்சி… உண்மையிலேயே இத்தனை கோடிகள் மட்டும்தான் வசூல் செய்ததா… அடப்பாவமே…

- Advertisement -

துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித்திற்கு வெளியான படம்தான் விடா முயற்சி. இரண்டு ஆண்டுகள் கழித்து அஜித் திரைப்படம் திரையரங்குகளுக்கு வருவதால் அதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர் ரசிகர்கள். இது மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு பல காரணங்களையும் கூறலாம்.

அதில் மிக முக்கியம் படத்தின் இயக்குனரான மகிழ் திருமேனி. சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படங்களை எடுப்பதில் கெட்டிக்காரரான அவர், இதற்கு முன்பு தடையற தாக்க தடம் உள்ளிட்ட படங்களை கொடுத்து ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்திருந்தார். இப்படி ஒரு சூப்பர் ஹிட் இயக்குனர், மாஸ் நடிகர் உடன் சேர்ந்து இருப்பதால் படத்தின் மீது ஒரு நம்பிக்கை இருந்தது.

- Advertisement -

இதற்கு வலு சேர்க்கும் விதமாக அனிருத்தின் இசையும் அமைந்தது. அதிலிருந்து இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், படத்தின் டிரைலரும் நம்பிக்கை கொடுத்தது. அதில் காட்சிகள் ஒவ்வொன்றும் ஹாலிவுட் தரத்திற்கு இருப்பதாக ரசிகர்களை கூறினர்.

ஆனால் இந்த அத்தனை எதிர்பார்ப்புகளையும் தவிடு பொடி ஆக்கியது விடாமுயற்சி திரைப்படம். முதல் பாதி நன்றாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு சுத்தமாக இல்லை என்றும், மிகவும் பிளாட் ஆக கதை நகர்வதாகவும் பலர் கூறினர். இதனால் விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் அஜித் ரசிகர்கள் மாஸ் காட்சிகளை எதிர்பார்த்து விடாமுயற்சி திரைப்படத்திற்கு சென்றனர். ஆனால் ரசிகர்கள் கைதட்டி விசில் அடிக்கும் வகையில் பெரிய அளவில் எந்த காட்சிகளும் இடம்பெறவில்லை. இப்படி ஏமாற்றத்தை கொடுத்த இந்த திரைப்படம் வசூலிலும் சோபித்து விட்டதாக சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த திரைப்படம் 90 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கிறதாம். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் விடாமுயற்சி 150 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித் நடித்த திரைப்படங்களிலேயே, அசல் பில்லா 2 வுக்கு பிறகு இதுதான் குறைந்த வசூல் செய்த படமாக பார்க்கப்படுகிறதாம். வலிமை, துணிவு உள்ளிட்ட திரைப்படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலை வாரி குவித்ததாம். குறிப்பாக துணிவு திரைப்படம் தான் அஜித்தின் திரை உலக கேரியரிலேயே அதிக வசூல் செய்த படம் என்று கூறுகிறார்கள். இப்படி இருக்கையில் விடாமுயற்சி திரைப்படம் வீழ்ந்திருக்க, இதனை குட் பேட் அக்லி திரைப்படம் சரி செய்யும் என்று பலரும் நம்புகிறார்கள்.

- Advertisement -

சற்று முன்