- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது விடுதலை 2, இந்த படத்தின் கிளைமேக்ஸில் வெற்றி மாறன்...

வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது விடுதலை 2, இந்த படத்தின் கிளைமேக்ஸில் வெற்றி மாறன் வைத்திருக்கும் டிவிஸ்ட் – அப்போ ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்!

- Advertisement -

இப்ப வருமோ, எப்ப வருமோ என்று பல மாதங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு ஒருவழியாக 2 படங்களில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அதில் ஒன்று அஜீத்குமார் நடிப்பில் உருவான விடாமுயற்சி படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகிறது. அதே போல் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை 2 படம், வருகிற டிசம்பர் 20ம் தேதி ரிலீஸாகிறது.

கடந்த 2023ம் ஆண்டில் மார்ச் மாத இறுதியில் விடுதலை படம் ரிலீஸானது. அதுவரை காமெடி நடிகராக இருந்த சூரியை, கதாநாயகனாக குமரேசன் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் மிக அழுத்தமாக நடிக்க வைத்திருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். எந்த காட்சியிலும் ஒரு காமெடி நடிகர் என்ற அடையாளமே இல்லாமல் புதுமுக ஹீரோ போல் சூரி நடிப்பு வேற லெவலில் இருந்தது.

- Advertisement -

இந்த படத்தில் பெருமாள் வாத்தியார் என்ற கேரக்டரில் தீவிரவாதியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். படத்தில் சில காட்சிகளே வந்தாலும் ஆளுமை மிக்க ஒரு கலைஞன் என்பதை விஜய் சேதுபதி அழுத்தமாக பதிவு செய்திருந்தார். சேத்தன், கௌதம் மேனன், பவானிஸ்ரீ, இயக்குனர் தமிழ் என ஒவ்வொருவரது நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

இந்நிலையில் தற்போது டிசம்பர் 20ம் தேதி விடுதலை 2 படம் ரிலீஸாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், இன்னும் நான் விடுதலை 2 படத்தின் ஷூட்டிங்கை முடிக்கவில்லை. தயாரிப்பாளர் சொன்னதால் நிறுத்தியிருக்கிறேன். ஏனென்றால் இன்னும் காட்சிகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது என்று கூறி ஆச்சரியப்படுத்தினார்.

- Advertisement -

இந்த சூழலில் விழாவில் பேசிய இளையராஜா, விடுதலை 2 படத்தை முதலில் நான்தான் பார்ப்பேன். நான் பார்த்த பிறகுதான் மற்றவர்கள் பார்க்க முடியும். வெற்றிமாறன் இந்த படத்துக்காக நிறைய உழைத்திருக்கிறார். இந்த படம் நிச்சயமாக பெரிய வெற்றிப் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, என்று பாராட்டியிருந்தார்.

விடுதலை 2 படம் வருகிற டிசம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இப்போதைய லேட்டஸ்ட் தகவலாக, இந்த படத்தின் கிளைமாக்ஸில் விடுதலை 3 படத்துக்கான லீடும் வர உள்ளது. அதாவது விடுதலை 3 படம் வருவது உறுதி. ஆனால் அது எப்போது வேண்டுமானாலும் வரலாம். 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் கழித்துக் கூட வர வாய்ப்பிருக்கலாம் என்ற முறையில் விடுதலை 3 படத்தின் முன்னோட்டம் இறுதிகாட்சியில் வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்