- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடுதலை 2 படத்தின் வெற்றியை இப்படி கொண்டாடினாரா இயக்குனர் வெற்றிமாறன் - அந்த குடும்பத்துக்கு ஏற்கனவே...

விடுதலை 2 படத்தின் வெற்றியை இப்படி கொண்டாடினாரா இயக்குனர் வெற்றிமாறன் – அந்த குடும்பத்துக்கு ஏற்கனவே சிறப்பா செஞ்சுட்டாராமே?

- Advertisement -

பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் வெற்றிமாறன். இதுவரை அவர் இயக்கிய எல்லா படங்களுமே வெற்றிப் படங்களாகவே இருக்கின்றன. ஆடுகளம், அசுரன், விசாரணை, வடசென்னை, விடுதலை மற்றும் விடுதலை 2 என அவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்று கொண்டாடப்படுகின்றன.

இரண்டு தினங்களுக்கு முன் வெளியான விடுதலை 2 படத்துக்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் மலேசியா சிங்கப்பூர் துபாய் போன்ற நாடுகளில் விடுதலை 2 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை. அதற்கு கம்யூனிசம் பேசும் போராட்ட களமாக விடுதலை 2 படம் இருப்பதுதான்.

- Advertisement -

எனினும் தமிழ்நாட்டை பொருத்த வரை விடுதலை 2 படமும், வெற்றிமாறனின் வெற்றிப் படங்கள் லிஸ்ட்டில் இணைந்து விட்டது என்றுதான் கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் முதல் நாளன்று ரூ. 7 கோடியும் உலகளவில் ரூ. 12 கோடியும் வசூலித்த விடுதலை 2 படம், இப்போது 3 நாட்களில் தமிழ்நாட்டில் 23 கோடியும், உலகளவில் ரூ. 30 கோடியும் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை, விடுதலை 2 படங்கள் இரண்டுமே புலவர் கலிய பெருமாள் என்கிற வாத்தியார் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. அதனால் அவரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த வெற்றிப் படங்களுக்கு காரணமான அவரது குடும்பத்துக்கு, விடுதலை முதல் பாகம் வந்த போதே ஒரு கவுரவமான தொகையை இயக்குனர் வெற்றிமாறன் வழங்கியிருக்கிறார்.

- Advertisement -

அதே போல் இப்போது விடுதலை 2 படம் வெற்றியை தொடர்ந்து அந்த படத்தின் பணிபுரிந்த அனைவருக்கும் தங்க நாணயங்களை பரிசளித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் வெற்றிமாறன் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

விடுதலை முதல் பாகத்தை விட 2ம் பாகம் அவ்வளவு சுவாரசியமில்லை என்ற விமர்சனம் இருந்த போதிலும், வசூல் ரீதியாக விடுதலை 2 வெற்றியை தந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் முதல் படத்தில் சூரியை நாயகனாக காட்டி, விஜய் சேதுபதியை சில காட்சிகளில் காட்டிய வெற்றிமாறன், 2ம் பாகத்தில் விஜய் சேதுபதியை நாயகனாக காட்டி, சூரியை டம்மியாக்கி விட்டார் என்றும் ஒரு விமர்சனம் எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்