- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிப்புக்கு 3 வருடம் பிரேக் என்ற வதந்திக்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா? விஜய்யின்...

நடிப்புக்கு 3 வருடம் பிரேக் என்ற வதந்திக்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா? விஜய்யின் மாஸ்டர் பிளான்

- Advertisement -

நடிகர் விஜய் அரசியலுக்காக 3 வருடம் நடிப்புக்கு பிரேக் எடுக்க உள்ளார் என்ற தகவல் இணையத்தில் பரவியதில் இருந்து சமூக ஊடகங்களில் பரபரப்பு கிளம்பியது. விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்காக தன்னை தயார் படுத்திக்கொள்ள உள்ளார் எனவும் ஆதலால் விரைவில் கட்சி தொடங்கி அதனை மக்களிடம் கொண்டு செல்லும் பணிகளில் தீவிரமாக களமிறங்க உள்ளார் எனவும் தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் இந்த தகவல் வெளிவந்த சில நாட்களில் விஜய் தரப்பில் இருந்து இந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்று கூறப்பட்டது. விஜய் 3 வருடங்கள் நடிப்புக்கு பிரேக் எடுக்க உள்ளார் என்ற தகவ்ல் பொய்யான தகவல் என்று கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஓரளவு ஆசுவாசமடைந்தனர்.

- Advertisement -

விஜய் விரைவில் அரசியல் கட்சித் தொடங்க உள்ளார் என்ற தகவலை பலர் உறுதிப்படுத்தினாலும் அவர் சினிமாவிற்கு 3 வருடங்கள் பிரேக் எடுக்க உள்ளார் என்று பரவிய தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனினும் இத்தகவல் வதந்தி என்று தெரிய வந்த பிறகு ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் இருந்து மீண்டனர்.

இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி, விஜய் 3 வருடங்கள் பிரேக் எடுப்பதாக பரவிய வதந்திக்கு பின்னணியில் ஒரு விஷயம் இருப்பதாக கூறியுள்ளார்.

- Advertisement -

அதாவது விஜய் எந்த படத்தில் நடித்தாலும் அவர் வாங்கும் சம்பளத்தை குறித்த தகவல்கள் வெளிவராது. ஆனால் முதல் முறையாக “தளபதி 68” திரைப்படத்திற்கு விஜய் 200 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்த சமயத்தில் அரசியலுக்காக விஜய் நடிப்புக்கு பிரேக் விடுகிறார் என்ற செய்தி வெளிவந்தால், ‘200 கோடியை விட்டுவிட்டு மக்களுக்காக விஜய் சேவை செய்ய வருகிறார்’ என்று மக்களிடையே அவர் மீது ஒரு நல்ல அபிப்ராயம் வரும். இதுதான் இந்த வதந்திக்கு பின்னணியாக இருக்கும் என்று பிஸ்மி கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்