- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதே தீப்பந்தம்... அதே அரசியல் யுத்தம்... அந்த நடிகருக்காக எழுதிய கதையைத்தான் விஜயை வைத்து எடுக்கிறாரா...

அதே தீப்பந்தம்… அதே அரசியல் யுத்தம்… அந்த நடிகருக்காக எழுதிய கதையைத்தான் விஜயை வைத்து எடுக்கிறாரா ஹெச் வினோத்… சந்தேகத்தை எழுப்பிய அறிவிப்பு போஸ்டர்…

- Advertisement -

இந்திய திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கும் விஜய், தனது திரையுலக பயணத்தை முடித்துவிட்டு முழுக்க முழுக்க அரசியலில் களம் இறங்கும் திட்டத்தில் இருக்கிறார். இதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டு விட்டார். தமிழக வெற்றிக் கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்திருக்கும் விஜய், அண்மையில் கட்சி கொடியை வெளியிட்டார்.

 

- Advertisement -

இரு பக்கமும் சிவப்பு நடுவில் மஞ்சள், அதில் எதிரெதிரே இரண்டு யானைகள், வாகை மலர், 28 நட்சத்திரங்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து மாநாடு நடத்தும் திட்டத்தில் இருக்கிறார். இதற்காக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அவர் தேர்வு செய்திருக்கிறார்.

 

- Advertisement -

செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடைபெறும் என காவல்துறையிடம் அளித்த அனுமதி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அது தள்ளிப் போகிறதாம். மிகக் குறுகிய காலத்தில் அவர்கள் அனுமதி கேட்டு விண்ணப்பித்தது இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

 

காவல்துறையின் நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்திருந்தாலும், இடைப்பட்ட நாட்களுக்குள் மாநாடுக்கான ஏற்பாடுகளை தீவிர படுத்த முடியாது என்பதால், அக்டோபர் மாதம் மூன்றாம் வாரத்தில் மாநாடு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க தனது கடைசி திரைப்படத்திலும் நடிப்பதற்கான வேலைகளில் விஜய் இறங்கி இருக்கிறார்.

 

இதனை இயக்கப் போவது எச். வினோத் தான். தெலுங்கு மற்றும் கன்னடாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான கேவிஎன், விஜயின் 69 ஆவது படத்தை தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதற்கான அறிவிப்பு போஸ்டர் நேற்று வெளியானது. அதில் கையில் தீப்பந்தம் இருப்பது போன்ற புகைப்படம் இருந்தது.

 

இதற்கு முன்னதாக கமல்ஹாசனை வைத்து வினோத் படம் இருக்க இருந்தார். அதற்கான அறிவிப்பு போஸ்டரிலும் கையில் தீப்பந்தம் இருந்தது. ஆனால் சில பல காரணங்களால் அந்தப் படம் எடுக்கப்படாமல் போனது. தற்போது, அந்த திரைப்படத்தை தான் விஜய்க்காக வினோத் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க தேமுதிக கட்சி கொடியில் இருக்கும் தீப்பந்தத்தை தான் விஜய் காட்டுவதாகவும் சிலர் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்