- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி ஒரு இடைவேளை காட்சிக்கு, விஜய் எப்படி ஒப்புக் கொண்டார் என்றே தெரியவில்லை... லியோ படத்தின்...

இப்படி ஒரு இடைவேளை காட்சிக்கு, விஜய் எப்படி ஒப்புக் கொண்டார் என்றே தெரியவில்லை… லியோ படத்தின் பரபரப்பான புது அப்டேட் இதோ…

- Advertisement -

மாநகரம், கைதி திரைப்படங்களால் புகழ்பெற்ற லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றார். 2021ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய்யின் நடிப்பை விட வில்லத்தனமான விஜய் சேதுபதியையே, பலரும் ரசித்தனர். இதன்பிறகு, விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜய் உடன் இணைந்து இருக்கிறார். இதற்கு லியோ என டைட்டில் வைக்கப்பட்டு சூட்டிங் பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. தற்போது இதற்கான பேட்ச் ஒர்க் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

லியோ படத்தை செவன் ஸ்டார் நிறுவனம் மூலம் தயாரிக்கும் லலித் குமார், ஆரம்பத்தில் இருந்தே அப்டேட்களை அள்ளி வீசி வருகிறார். முதலில் படக்குழு காஷ்மீர் சென்றது தொடர்பான வீடியோவை வெளியிட்ட அவர், விஜய்யின் பிறந்தநாளன்று நா ரெடி தான் பாடலையும் வெளியிட்டார். 2000 நடன கலைஞர்களுடன், விஜய்யின் சொந்த குரலில் உருவான இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. யூப்டியூபில் 10 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை இந்த திரைப்படம் பெற்றுள்ளது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து, சஞ்சய் தத்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இதில் அவர் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அர்ஜுன் பிறந்தநாளில், புது வீடியோ வெளியாகி ஹரால்டு தாஸ் என்னும் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில் அர்ஜுனுக்கு என அனிருத் அமைத்திருக்கும் இசையை, பலரும் பாராட்டினர்.

இதனிடையே, லியோ திரைப்படம் பிரீ பிசினஸிலும் மிகப்பெரிய சாதனையை புரிந்துள்ளது. நெட் பிளிக்ஸ் ஓடிடி தளம் மட்டும் 125 கோடி ரூபாய்க்கு இந்த படத்தை கைப்பற்றியுள்ளது. இதுபோக, இசை மற்றும் சாட்டிலைட் உரிமைக்கும் மிகப்பெரிய தொகைக்கு லியோ திரைப்படம் போய் உள்ளது. ஜெயிலர் படத்தை அடுத்து லியோ திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் லியோ திரைப்படத்திலிருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது முழுக்க முழுக்க இது லோகேஷ் கனகராஜன் திரைப்படம் ஆக தான் உருவாகி இருக்கிறதாம். முன்னணி நட்சத்திரங்களுக்கு உண்டான அதர பழசான எந்த ஒரு காட்சியும் லியோவில் இருக்காது என்று கூறப்படுகிறது. படம் நிச்சயமாக வேறு லெவலில் இருக்கும் என்றும், இதற்கான சூட்டிங்கின் போதே எடுக்கப்பட்ட புதுமையான முயற்சிகளை பார்த்து விஜய் வியந்ததாகவும் நா ரெடி தான் பாடலை எழுதிய விஷ்ணு எடவன் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் படத்தின் இடைவெளி காட்சி இதுவரை இல்லாத அளவுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் என்றும், இதில் விஜய் எப்படி நடிக்க ஒப்புக்கொண்டார் என்றே தனக்கு தெரியவில்லை என்றும் அவர் பேசியிருக்கிறார். இதேபோல், லியோ படத்தில் திரைக்கதையை அமைக்கும் ரத்தினவேலுவும், படத்தின் இடைவெளி காட்சி நூறு சதவீதம் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று தெரிவித்திருக்கிறார். இதனால் உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள், வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் லியோவின் ரிலீஸுக்காக காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்