- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய், அஜீத்குமார் படங்களில் நடிக்க உண்மையா எவ்வளவு சம்பளம் வாங்கறாங்க? அத்தனை கோடி எல்லாம் இல்லே...

விஜய், அஜீத்குமார் படங்களில் நடிக்க உண்மையா எவ்வளவு சம்பளம் வாங்கறாங்க? அத்தனை கோடி எல்லாம் இல்லே – அதிலும் அஜீத்குமார் சொல்ற ரூல்ஸ் என்ன தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமா கருப்பு வெள்ளையில் இருந்த எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் சம்பளம் என்பது ஹீரோக்களுக்கு சில ஆயிரங்களாக தான் இருந்தது. பிறகு ஈஸ்மண்ட் கலர், முழுநீள வணணச்சித்திரம் என தமிழ் சினிமா முழுமையான கலருக்கு மாறியது. அப்போது சில லட்சங்களில் ஹீரோ நடிகர்கள் சம்பளம் வாங்கினார்கள்.

அதன் பிறகு 1990 களில் நடிகர்கள் சம்பளம் கோடி ரூபாயாக உயர்ந்தது ஆனால் இப்போது ஹீரோ நடிகர்களின் சம்பளம் 50 கோடி, 100 கோடி, 150 கோடி 200 கோடி 250 கோடி ரூபாய் என விண்ணை முட்டி நிற்கிறது. ஒரு படத்தில் நடிக்க இத்தனை சம்பளமா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு நடிகர்களின் சம்பளம் பல நூறு மடங்கு அதிகரித்துவிட்டது.

- Advertisement -

குறிப்பாக காமெடி நடிகர்கள் கூட ஒரு படத்தில் நடிக்க கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். பிரபல நடிகைகள் ஒரு படத்தில் ஐட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போட 2 கோடி 3 கோடி ரூபாய் என்று சம்பளம் வாங்குகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர் விஜய் மற்றும் அஜித் குமார் வாங்குகிற சம்பளம் குறித்த பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

நடிகர் விஜய் சம்பளம் லியோ படத்தில் நடித்த போது 175 கோடி ரூபாய் என்றும் தி கோட் படத்தில் நடித்த போது 200 கோடி ரூபாய் சம்பளம் என்றும், இப்போது விஜய் 69வது படத்தில் நடித்த அவர் 275 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் நடிகர் விஜய் லியோ படத்தில் நடிக்க ரூ. 150 கோடி ரூபாய், தி கோட் படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் 186 கோடி ரூபாய் தான் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் விஜய் இப்போது நடிக்கும் 69 வது படத்துக்கு வாங்கும் சம்பளம் 217 கோடி ரூபாய் தான் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் விடாமுயற்சி படத்தில் நடிக்க ரூ. 163 கோடி வாங்குகிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர் தற்போது தனது படம் டிஜிட்டல் ரைட்ஸ் சாட்டிலைட் ரைட்ஸ் எத்தனை கோடிகளுக்கு விற்கப்படுகிறதோ அதுதான் தனது சம்பளம் என்று புதிதாக ஒரு ரூல்ஸ்சை கொண்டு வந்திருக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த ரூல்ஸ் படி பார்த்தால் இப்போது டிஜிட்டல் உரிமம் வாங்கும் ஓடிடி நிறுவனங்கள் தங்களது விலையை பாதியாக குறைத்துவிட்டன. அதே போல் சாட்டிலைட் நிறுவனங்கள் புதிய படங்கள் வாங்குவதற்கு யோசிக்கின்றன.

இந்த சூழ்நிலையில் இந்த ரூல்ஸ்சை வைத்து எப்படி அடுத்த படத்தின் சம்பளத்தை தீர்மானிப்பார் அஜித் குமார் என்ற குழப்பமும் நீடிக்க்கிறது. எனினும் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரவுவது போல் 200 கோடி 275 கோடி ரூபாய் என்பதெல்லாம் நடிகர்களின் உண்மையான சம்பளம் இல்லை. அவர்கள் நடிக்கும் படத்தை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே அவர்களது உண்மையான சம்பளம் தெரியவரும் என்று வலைப்பேச்சு ஜெ பிஸ்மி சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்