- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்கள் அப்படி செய்தால் உங்களை முதலில் சுட்டு கொன்று விடுவேன் - சீனியர் தெலுங்கு நடிகரை...

நீங்கள் அப்படி செய்தால் உங்களை முதலில் சுட்டு கொன்று விடுவேன் – சீனியர் தெலுங்கு நடிகரை மேடையில் நேரடியாக மிரட்டிய மலையாள நடிகர் மோகன்லால்!

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து பான் இந்தியா படங்கள் உருவாகி வருகின்றன. இப்போது அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் இருந்து பான் இந்தியா படமாக கண்ணப்பா என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடித்திருக்கிறார்.

மேலும் கண்ணப்பா படத்தில் முக்கியமான கேரக்டர்களில் மலையாள நடிகர் மோகன்லால் இந்தி நடிகர் அக்சய் குமார் மற்றும் பிரபாஸ் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் அதாவது கேமியோ ரோலில் சில காட்சிகளில் நடித்துள்ளனர். தெலுங்கில் சீனியர் நடிகரான மோகன் பாபு, கண்ணப்பா படத்தை சொந்தமாக தயாரித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் அவரும் இந்த படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். வரும் 27ம் தேதி கண்ணப்பா படம் வெளியாகிறது. இதை முன்னிட்டு கண்ணப்பா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் கேரளாவில் கண்ணப்பா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் மோகன்லால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது விழாவில் நடிகர் மோகன்லால் பேசுகையில், மோகன் பாபு ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும். அவருக்கு வில்லனாக நான் நடிக்க வேண்டும் என்று மோகன்லால் தனது விருப்பத்தை கூறினார். உடனே மேடையில் இருந்த நடிகர் மோகன் பாபு, அப்படி இல்லை. நீங்கள் ஹீரோவாக நடிக்க வேண்டும். நான்தான் உங்களுக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று பதில் கூறினார்.

- Advertisement -

அதற்கு நடிகர் மோகன்லால் பதில் கூறுகையில், கிட்டத்தட்ட 560 படங்களில் நீங்கள் நடித்து விட்டீர்கள். இப்போது உங்களுக்கு ஏன் இப்படி வில்லனாக நடிக்கும் ஆசை? அப்படி ஒருவேளை நீங்கள் என் படத்தில் வில்லனாக நடித்தே தீருவேன் என்றால், உங்களை முதல் காட்சியிலேயே சுட்டுக் கொன்று விடுவேன் என்று மிரட்டும் தொனியில் ஜாலியாக கூறினார். இதை பார்த்து அங்கிருந்த கண்ணப்பா படக்குழுவினரும் ரசிகர்களும் கைதட்டி ஆரவாரம் செய்து சிரித்தனர்.

மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் மோகன் பாபு இருவரும் இணைந்து இதுவரை எந்த படத்திலும் நடிக்கவில்லை. இருவருமே சீனியர் நடிகர்கள். ஆனாலும் கூட பல ஆண்டுகால நட்பு அவர்களுக்குள் உண்டு. அந்த மிகுதியான நட்பின் நெருக்கம் காரணமாகவே மோகன்லால் முதல் காட்சியிலேயே வில்லனை சுட்டுக்கொன்று விடுவேன் என்று ஜாலியாக பேசினார். அவர்களின் அந்த நெருக்கத்தை இந்த நிகழ்வில் ரசிகர்கள் காண முடிந்தது.

- Advertisement -

சற்று முன்