மாநகரம் கைதி மாஸ்டர் விக்ரம் லியோ ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்து வருகிறார். கார்த்தி, விஜய், கமல் படங்களை தொடர்ந்து ரஜினி படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், அமீர்கான் போன்ற நட்சத்திர நடிகர்களை முக்கிய கேரக்டர்களில் நடிக்க வைத்திருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் 70 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் ஷூட்டிங்கை முடித்துவிட இயக்குனர் திட்டமிட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இதில் அடிக்கடி முக்கிய நட்சத்திர நடிகர்களை அழைத்து 3 நாட்கள் வரை அவர்களை நடிக்க வைப்பது இயக்குனரின் புது பாணியாக உள்ளது.
கூலி படத்தில் நடிகர் நாகார்ஜூனா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் நடிகை அமலாவின் கணவர் என்பதும், நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் அப்பா என்பதும் குறிப்பிடத்தக்கது. அமலா தமிழில் பல படங்களில் நடித்தவர். ரஜினியுடன் வேலைக்காரன், மாப்பிள்ளை, கமலுடன் சத்யா, பிரபுவுடன் அக்னி நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். ஏற்கனவே ரட்சகன், பயணம், தோழா உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்திருக்கிறார். அவரது ஆரம்ப கால படங்களான உதயம் இதயத்தை திருடாதே போன்ற படங்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றவை. அதிலும் குறிப்பாக தோழா படத்தில் கார்த்தி, தமன்னா, பிரகாஷ் ராஜூடன்அவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது.
இந்நிலையில் கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாகா்ஜூனா, ரஜினிகாந்துடன் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நாகர்ஜூனா கூறுகையில், கூலி படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜூடஜ் வேலை பார்ப்பதில் நான் மிகவும் உற்சாகம் அடைகிறேன். அவர் திரைக்கதை உள்ளிட்ட மற்ற அனைத்திலும் அடுத்த தலைமுறை இயக்குனர் என்பதை நிரூபித்து வருகிறார்.
அவரது படத்தில் அவர் சொல்லும் கேரக்டர்களில் நடிப்பது ரொம்பவும் புதுமையாக இருக்கிறது. அதற்கான சுதந்திரத்தையும் அவர் நடிகர்களுக்கு கொடுக்கிறார். அங்கே எந்த ஒரு விதிமுறைகளும் இல்லை. ஒரு ஹீரோவிடமும் சரி, வில்லன்களிடமும் சரி நீங்கள் இப்படித்தான் நடிக்க வேண்டும், இப்படிதான் நடந்து கொள்ள வேண்டும் என்று ஒருபோதும் அவர் சொல்வதில்லை, என்று நாகர்ஜூனா வெளிப்படையாக கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





