- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் திரைப்படத்தை அன்பே சிவம் மாறி ஆக்கிராதீங்க... விஜய் ஆண்டனி வேதனை... பிரபல சினிமா விமர்சகரையும்...

என் திரைப்படத்தை அன்பே சிவம் மாறி ஆக்கிராதீங்க… விஜய் ஆண்டனி வேதனை… பிரபல சினிமா விமர்சகரையும் சீண்டிய நடிகர்…

- Advertisement -

நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பன்முக திறமை பெற்று விளங்குபவர் விஜய் ஆண்டனி. இவருக்கு, காதலில் விழுந்தேன் திரைப்படம் மிகப்பெரிய திருப்பு முனையை கொடுத்தது. அந்த திரைப்படத்தின் இடம்பெற்ற நாக்க முக்க பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, விஜய் ஆண்டனி பேசப்பட்டார்.

 

- Advertisement -

தொடர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களுக்கும் அவர் இசை அமைத்திருக்கிறார். இப்படியான சூழலில், நான் திரைப்படம் அவருக்கு ஹீரோவாகும் வாய்ப்பை கொடுத்தது. சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் திரைப்படமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. விஜய் ஆண்டனியும் நடிப்பில் குட் மார்க் பெற்றார்.

 

- Advertisement -

பிறகு அடுத்தடுத்து விஜய் ஆண்டனி நடிப்பில் கவனம் செலுத்த, அவருக்கு யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது பிச்சைக்காரன் திரைப்படம். சசி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தை ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

 

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, தாய் மகன் பாசத்தை மிக அழகாக காட்டிய இந்த திரைப்படம் வசூல் ரீதியாக விஜய் ஆண்டனிக்கு சாதனை திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படம் தெலுங்கில், குறைந்த செலவில் டப் செய்யப்பட்டு மிகப்பெரிய வசூலை படைத்தது. ஆனால் பிச்சைக்காரன் திரைப்படத்திற்கு பிறகு, விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய வெற்றி என்று எந்த திரைப்படமும் அமையவில்லை.

 

அவர் மலை போல் நம்பி இருந்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகமும் சுமாரான விமர்சனத்தையே பெற்றது. இப்படியான சூழலில் விஜய் ஆண்டனி நடிப்பில் ரோமியோ திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இதன் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி சுமாராக உள்ளது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் படம், எதிர்பார்த்த அளவு போகவில்லை.

 

இந்த நிலையில், விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், பல நல்ல திரைப்படங்களை தவறாக விமர்சித்துக் கொள்ளும் ப்ளூ சட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவர்கள் கூறுவதை எல்லாம் நம்பி ரோமியோ போன்ற நல்ல படங்களை தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே ரோமியோ திரைப்படம் நல்ல திரைப்படம் போய் பாருங்கள் புரியும். ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என்று குறிப்பிட்டுள்ளார். நடிகரின் இந்த அறிக்கை சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்