- Advertisement -
Homeபொழுதுபோக்கு10 நாட்களில் எப்படி முடியும்? இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் - தமிழக முதல்வர்...

10 நாட்களில் எப்படி முடியும்? இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் – தமிழக முதல்வர் விஜயை சந்தித்த நடிகை குஷ்பு விடுத்த வேண்டுகோள்!

- Advertisement -

கடந்த மே 10ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றார். அவர் தமிழக முதல்வராக பதவி ஏற்றது முதல் தமிழ் சினிமாத்துறை சார்ந்த பல சங்கங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் என பலரும் முதல்வர் விஜயை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை அளித்து வருகின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கம் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் தியேட்டர் உரிமையாளர் சங்கம் திரைப்பட எழுத்தாளர் சங்கம் என தொடர்ந்து தினமும் அப்பாயிண்மென்ட் தரப்பட்டு அவர்கள் முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வருகின்றனர். அப்போது தங்கள் துறை சார்ந்த பல கோரிக்கை மனுக்களை அவரிடம் தருகின்றனர்.

- Advertisement -

தமிழக முதல்வர்களாக இருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்று சினிமா நடிப்பு துறையில் இருந்த நேரடியாக அரசியல் களத்துக்கு வந்தவர் விஜய் என்பதால் சினிமா துறை சார்ந்த பிரச்னைகள் அனைத்துமே அவருக்கு தெரிந்த விஷயங்கள்தான். இருப்பினும் சட்ட ரீதியாக நடைமுறை சாத்தியமான விஷயங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசித்துதான் அவர் உத்தரவிட முடியும்.

இந்நிலையில் தமிழ் சினிமாவைப் போன்று தமிழ் சின்னத்திரையைச் சேர்ந்த நடிகைகள் குஷ்பு குட்டி பத்மினி தலைமையிலான சின்னத்திரை கவுன்சில் நிர்வாகிகள் இன்று தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்து பேசினார். அப்போது சின்னத்திரையில் நிலவும் சிக்கல்கள் மற்றும் தங்களது கோரிக்கைகளையும் அவரிடம் முன்வைத்தனர்.

- Advertisement -

முதல்வர் விஜயை சந்தித்து விட்டு வெளியே வந்த நடிகை குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது குஷ்பு கூறியதாவது, ஒரு சக நடிகராக என் தம்பி விஜய் இப்போது முதல்வராகி இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. கோவையில் நடந்த சம்பவம் மிகவும் கஷ்டமானது. நமது சமுதாயத்தில் இன்னும் இந்த மாதிரி மிருகங்கள் வாழ்கின்றன.

திமுக ஆட்சியில் என்னவெல்லாம் நடந்தது என்பதை மறந்து விட்டு 10 நாட்களுக்குள் எல்லாவற்றையும் சரி செய்யணும் என்றால் எப்படி முடியும்? இப்போதுதான் விஜய் வந்திருக்கிறார். கொஞ்சம் டைம் கொடுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். பாஜக மாநில துணைத் தலைவராக இருக்கும் குஷ்பு தமிழக முதல்வருக்கு ஆதரவாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்