- Advertisement -
நேர்காணல் ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது, இப்போது இருக்கின்ற காலத்தில் ஒரு ஃபேமிலியில் நாலு பேரை வச்சு குடும்பம் நடத்துவதேகஷ்டம். அப்போ 7 கோடி பேர் மக்களை எப்படி ஒருத்தரால் மாற்ற முடியும்? எல்லாத்தையும் அரசாங்கம் பண்ணும்ன்னு எதிர்பார்க்கக் கூடாது. சட்டம் ஒழுங்கை கடுமையாக்கறது இதுதான் அரசாங்கம் பண்ண முடியுமே தவிர மக்கள் திருந்தாம அரசியல்வாதிகளால் மட்டும் மாற்றம் வந்துவிடாது. எனவே இதற்கு முன்னால் அவர்களுக்கும் முன்னால் எப்படி ஆட்சி பண்ணினாங்களோ அதே மாதிரி நல்லா தான் பண்ணிட்டு வர்றாங்க என்று இந்த 6 மாத கால அரசியல் மாற்றம் குறித்து விஜய் ஆண்டனி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





