- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக தலைவர் விஜயை மட்டம் தட்டும் டிஎன் 2026 படம், விஜய் கெட்டப்பில் நடிகர் நட்டி,...

தவெக தலைவர் விஜயை மட்டம் தட்டும் டிஎன் 2026 படம், விஜய் கெட்டப்பில் நடிகர் நட்டி, இந்த படத்தை யாருமே பார்க்காதீங்க – கொந்தளித்த தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் தவெக கட்சி தலைவராக இப்போது வெற்றி நாயகனாக வலம் வருகிறார். எப்படியும் இந்த முறை தமிழக முதல்வர் விஜய்தான் என்று தமிழக மக்கள் பரவலாக கருத்து கூறிவரும் நிலையில் ஆளுங்கட்சி திமுக எதிர்கட்சி அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கலக்கத்தில் இருந்து வருகின்றன.

இப்படிப்பட்ட அரசியல் சூழலில் நடிகர் விஜயை மட்டும் தட்டி இழிவுபடுத்தும் நோக்கத்தில் டிஎன் 2026 என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது. காமெடி நடிகர் தம்பி ராமையா மகன் நடிகர் அர்ஜூன் மருமகன் உமாபதி ராமையா டைரக்ட் செய்துள்ள இந்த படம் வருகிற ஏப்ரல் 17ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இப்போது டிஎன் 2026 படத்தின் டீசர் வெளியான நிலையில் அந்த படத்தில் விஜய் கெட்டப்பில் நடிகர் நட்டி வருகிறார். புஸ்லி ஆனந்த் போன்ற ஒரு கெட்டப்பில் நடிகர் தம்பி ராமையா நடித்துள்ளார். மேலும் எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட சிலரும் இந்த படத்தில் காணப்படுகின்றனர்.

சினிமாக்கார பயல்கள் தமிழ்நாட்டில் வாழலாம். நடிகன் நாட்டை ஆள நினைக்கலாமா? நடிகனுக்கு நடிக்க தெரியும். அரசியல் தெரியுமா? எம்ஜிஆர் எப்படி முதலமைச்சர் ஆனார் தெரியுமா? என அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்கள் நடிகர் விஜயை குறிவைத்து தாக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன.

மேலும் நடிகர் விஜயின் குடும்ப விவகாரம் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் இந்த படத்தில் காட்சிகள் வருவது போல் டீசரில் காட்டப்பட்டுள்ளன. எம்எஸ் பாஸ்கர் தம்பி ராமையா போன்றவர்கள் நடிகர் விஜய் படங்களில் நடித்த போது அவர் குறித்து பெருமையாக பேசிவிட்டு இப்போது பணத்துக்காக அவரை மட்டம் தட்டும் கேரக்டர்களில் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

குறிப்பாக நடிகர் நட்டி விஜய் போன்ற கெட்டப்பில் நரைத்த தாடி மீசையுடன் அதே உடையில் விஜய் போலவே நடந்து வருகிறார். இதைப் பார்த்து கொந்தளித்த தவெக தொண்டர்கள் தளபதி ரசிகர்கள், எங்க தலைவர் நடித்த ஜனநாயகன் படத்தை ரிலீஸ் பண்ண விடமாட்டீங்க? எங்க தலைவரை கொச்சைப்படுத்தற படத்தை மட்டும் விடுவீங்களா? இந்த படத்தை யாருமே தியேட்டர்ல போய் பார்க்காதீங்க என்று இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

சற்று முன்