- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் பேரனிடம் நீ உன் தந்தையை வைத்துதானே இயக்கப் போகிறாய் என்று கேட்டதும் அவன் சொன்ன...

என் பேரனிடம் நீ உன் தந்தையை வைத்துதானே இயக்கப் போகிறாய் என்று கேட்டதும் அவன் சொன்ன பதில் ஆச்சரியம் அளித்தது… உருகிய விஜயின் தந்தை…

- Advertisement -

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் சக்கரவர்த்தியாக விளங்குபவர் விஜய். அவருக்கென தனி ரசிகர் கூட்டம் குடும்ப ஆடியன்ஸ்கள் சிறுவர் சிறுமியர்கள் என மிகப்பெரிய பட்டாளமே இருப்பதால், விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் மாஸ் வெற்றியை பெற்று விடுகிறது.

கடந்த சில படங்கள் அவருக்கு விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை என்றாலும் வசூலில் எந்த ஒரு பின்னடைவையும் சந்தித்தது இல்லை. தற்போது அவர் சினிமாவை கைவிட்டு அரசியலில் முழு கவனம் செலுத்த இருக்கிறார். இதற்காக தற்போது எச் வினோத்துடன் இணைந்து கடைசி படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ பிரியாமணி கௌதம் மேனன் நரேன் பாபி தியோல் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். அரசியலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. அனேகமாக அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இது வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இப்படி விஜய் சினிமாவை விட்டு வெளியேறும் சமயத்தில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் திரைத் துறையில் கால் பதித்திருக்கிறார். பலரும் அவர் ஹீரோவாகத்தான் அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்த்து இருந்த வேலையில் அவர் இயக்குனராக களம் இறங்கியுள்ளார். இவரது முதல் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் கதாநாயகனாக சந்திப் கிஷன் நடிக்கிறார். கிட்டத்தட்ட இதற்கான பணிகளிலேயே சஞ்சய் ஓராண்டு காலமாக இருந்து விட்டார். தமன் படத்திற்கு இசையமைக்கிறார். படத்திலிருந்து மூன்று நாட்கள் சூட்டிங் வடசென்னை பகுதியில் எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக இலங்கைக்கு செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படியான சூழலில் தனது பேரன் குறித்து பேசி இருக்கும் விஜயின் தந்தை எஸ் சந்திரசேகர்,

நான் என் பேரன் ஹீரோவாகத்தான் ஆவான் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவன் என்னிடம் நான் இயக்குனராக போகிறேன் என்று கூறினான். அப்படி என்றால் உனக்கு என்னப்பா நீ உன் தந்தையை வைத்தே முதல் படத்தை வெற்றிப்படமாக கொடுத்து விடுவாய் என்று பேசினேன். அதற்கு அவன், இல்லை தாத்தா, நான் விஜய் சேதுபதியை வைத்து படம் எடுக்கத்தான் திட்டமிட்டு இருக்கிறேன் எனக்கூறி எனக்கு ஆச்சரியம் அளித்தான் என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்