- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம் ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை எப்போது?...

ஜனநாயகன் படம் ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை எப்போது? – வெளியான லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய். அவர் நடித்த ஜனநாயகன் படம் கடந்த 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. எச் வினோத் இயக்கத்தில் உருவான ஜனநாயகன் படத்தை பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்று தளபதி ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

இந்நிலையில் தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவும் நடந்து வந்தது. ஆனால் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் போர்டு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து விட்டது. இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளும் வசனங்களும் இருப்பதால் தணிக்கைக்குழு படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது. இதனால் குறிப்பிட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சிக்கலான சூழ்நிலை தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்டது.

- Advertisement -

இதையடுத்து கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பிடி ஆஷா ஜனநாயகன் படத்தை தணிக்கை குழு மறு ஆய்வு குழுவிற்கு பரிந்துரை செய்ததை ரத்து செய்தார். மேலும் இந்த படத்தை யு/ஏ சான்றிதழ் வழங்கி ரிலீஸ் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்எம் ஸ்ரீ வஸ்தவா தலைமையிலான அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளி வைத்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு தயாரிப்பு நிறுவனத்திற்கும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

- Advertisement -

அதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடையை நிறுத்தி வைக்க வேண்டும். தணிக்கை வாரியத்தின் வாதத்தை கேட்காமல் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் தங்கள் தரப்பு கருத்தை கேட்ட பிறகு எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என்று தணிக்கை வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜனநாயகன் படத்தை வெளியிடக் கோரி பட நிறுவனம் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனு மீதான வழக்கில் நாளை 15ம் தேதி விசாரணை நடக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. நாளை சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ஜனநாயகன் படம் ரிலீஸ் எப்போது என்பது உறுதியாகும் எனத் தெரிகிறது.

- Advertisement -

சற்று முன்