- Advertisement -
Homeபொழுதுபோக்குரிலீஸ் செய்வதற்கு முன்பே பல நூறு கோடிகள் நஷ்டத்தை சந்தித்தா விஜய் படம்? - ...

ரிலீஸ் செய்வதற்கு முன்பே பல நூறு கோடிகள் நஷ்டத்தை சந்தித்தா விஜய் படம்? – பின்னணியில் வெளியான பரபரப்பு தகவல்கள்

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விரைவில் துவங்க இருக்கின்றன. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். ஒருவர் அப்பாவாகவும் ஒருவர் மகனாகவும் நடித்துள்ள இந்த படம் டைம் டிராவல் கதையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது.

இந்த படத்தில் சினேகா, மீனாட்சி சௌத்திரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், சுதீப், கஞ்சா கருப்பு, டிவிடி கணேஷ், கனிகா, லைலா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதால் டீ ஏஜிங் முறைப்படி மிகவும் இளமையான தோற்றத்தில் மகன் விஜயை காட்டுவதற்காக நிறைய விஎப்எக்ஸ் ஒர்க் செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.

கடந்தாண்டு அக்டோபர் 2ம் தேதி பிரசாத் ஸ்டூடியோவில் துவங்கிய கோட் படம், 7 மாதங்களுக்குப் பிறகு இப்போது ஷூட்டிங் முடிந்துள்ளது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதி தான் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்கி, இந்த ஆண்டு செப்டம்பரில்தான் இந்த படம் ரிலீஸாகிறது. படம் எடுத்து முடிப்பதற்கே 8 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட திட்டமிட்ட நிலையில்,ஐந்து மாதங்கள் தாமதமாக இந்த படம் வெளியாக உள்ளது.

லியோ படத்துக்குப் பிறகு கோட் படத்துக்கான வியாபாரம் என்பது குறைவாகவே காணப்படுகிறது ஏனெனில் லியோ படத்துக்கு கிடைத்த டிஜிட்டல் ரைட்ஸ், சேட்டிலைட், ஒடிடி உரிமம் என்பது இந்த முறை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இது தயாரிப்பாளர்களை கவலை அடையச் செய்துள்ளது.

அந்த வகையில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு கோட் படம் 5 மாதங்கள் தாமதமாக ரிலீஸ் செய்யப்படுவதால், ஒரு விதத்தில் இந்த படம் தயாரிப்புக்கு கடன்கள், வட்டி என்ற அடிப்படையில் பார்க்கும்போது இது மிகப்பெரிய கணிசமான வருமான இழப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

குறிப்பிட்ட 6 மாதங்களுக்குள் படத்தை முடிக்க முடியாமல், ஏப்ரல் 14ம் தேதி வெளியாக வேண்டி இந்த படம், ஐந்து மாதங்கள் தாமதமாக செப்டம்பரில் வெளியாவது மிகவும் தாமதமாக சினிமா தயாரிப்பு நிறுவனத்தால் பார்க்கப்படுவதோடு, இந்த தாமதத்தால் ஏற்படும் பல நூறு கோடி ரூபாய்கள் வருமான இழப்பையும் நஷ்டக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது, அவர்களுக்கு இது ஒரு பலத்த ஏமாற்றமாகவே உள்ளது.

சற்று முன்