- Advertisement -
Homeபொழுதுபோக்கு5 மணி எப்போது வரும் என்று வெறியோடு காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்... எதிர்பார்ப்பை அதிகம் கூட்டுவதற்காக...

5 மணி எப்போது வரும் என்று வெறியோடு காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்… எதிர்பார்ப்பை அதிகம் கூட்டுவதற்காக கோட் படத்தில் இருந்து குட்டி வீடியோவும் வந்தாச்சு… ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் இதுதான்…

- Advertisement -

விஜய் ரசிகர்கள் பெரிதும் காத்திருக்கும் கோட் திரைப்படம், வரும் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நடப்பாண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியான எந்த திரைப்படங்களுமே ரசிகர்களின் மனதில் இடம்பெறவில்லை. அயலான், கேப்டன் மில்லர், லால் சலாம், இந்தியன் 2, ராயன் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

இப்படியான சூழலில், கோட் திரைப்படம் இதற்கு விதிவிலக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தைப் பார்த்துள்ள தளபதி விஜய், மிகவும் திருப்தியில் இருக்கிறாராம். அவர் இந்த அளவுக்கு எந்த திரைப்படத்தையும் பார்த்துவிட்டு மகிழ்ச்சி அடைந்ததில்லை என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

 

கோட் திரைப்படத்தில் இரண்டு விஜய் நடித்திருப்பது நம் அனைவருக்குமே தெரியும். தந்தை மற்றும் மகன் விஜய்க்கு இடையே நடக்கும் போராட்டம் தான் இந்த படத்தின் சிம்பிளான கதை என்று கூறப்படுகிறது. கோட் படத்திற்காக ஏராளமான விஷயங்களை சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. குறிப்பாக அந்தப் படத்தின் ஒரு பாடலுக்கு திரிஷா நடனம் ஆடுவது உறுதியாகி இருக்கிறது.

 

இதேபோல் கிளைமாக்ஸ் காட்சி, மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறதாம். சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டம் நடைபெறும் போது இதை படமாக்கி இருப்பதாக கூறுகிறார்கள். அதுபோக படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை, ஏ ஐ தொழில்நுட்ப மூலம் ஒரு நிமிடத்திற்கு காட்டியிருக்கிறார்கள்.

 

இப்படி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஏராளமான விஷயங்களை இயக்குனர் வெங்கட் பிரபு வைத்திருக்கிறார். படத்தில் இருந்து வெளியாகும் பாடல்கள் மட்டும் தான் ரசிகர்களுக்கு இப்போது ஒரு வித குடைச்சலை கொடுத்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படி பாடல்கள் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

மேலும் மகன் விஜய் கதாபாத்திரத்திற்காக அவர்கள் செய்திருக்கும் ஏஐ தொழில்நுட்பத்திற்கான விஷயமும், ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. இருப்பினும் அண்மையில் வெளியான போஸ்டர்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் தான் இன்று மாலை 5 மணிக்கு கோட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகிறது. இரண்டு நிமிடம் 45 வினாடிகள் இந்த ட்ரெய்லர் ஓடுகிறது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த ட்ரெய்லர், சமூக வலைதளத்தில் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது. ட்ரெய்லரின் முன்னோட்டமாக ஒரு சிறிய வீடியோவையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

 

சற்று முன்