- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் தனது 69வது படத்துக்கு ‘ஸ்பீடு’ன்னு டைட்டில் வெச்சிடுவாரா? - அந்த விஷயத்தில் இவ்வளவு வேகமாக...

விஜய் தனது 69வது படத்துக்கு ‘ஸ்பீடு’ன்னு டைட்டில் வெச்சிடுவாரா? – அந்த விஷயத்தில் இவ்வளவு வேகமாக இருக்கிறாரே? – அசந்துபோன கோட் படக்குழு!

- Advertisement -

ஏஜிஎஸ் எண்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள படம் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். கோட் என்றழைக்கப்படும் இந்த படம், வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி, விநாயகர் சதுர்த்தி பண்டிகையன்று ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தில் விஜய் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் நடித்து முடித்துவிட்ட நிலையில், இலங்கையில் கடந்த ஒரு வாரமாக கோட் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இதில் நடிகர் மைக் மோகன் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. படத்தில் மைக் மோகனுக்கு வில்லன் கேரக்டர் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

கோட் படத்தில் அப்பா, மகன் என்ற 2 கேரக்டர்களில் விஜய் நடிப்பதாகவும் அதில் அப்பா கேரக்டருக்கு சினேகாவும், மகன் கேரக்டருக்கு மீனாட்சி சௌத்ரியும் ஜோடியாக நடித்துள்ளனர் என ஆரம்பத்தில் இருந்தே கூறப்பட்டது. இப்போது அதில் முக்கிய திருப்பமாக, விஜய் இந்த படத்தில் 3 கேரக்டர்களில் நடித்திருப்பதாகவும், அதில் ஒரு விஜய்க்கு ஜோடி இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

விஜய், அவர் நடிக்க வேண்டிய போர்ஷன் முழுவதையும் முடித்த நிலையில், அமெரிக்காவுக்கு சென்று அவருக்கான விஎப்எக்ஸ் தொழில்நுட்ப காட்சிகளுக்கான, ஸ்பெஷல் ஷூட்டிங்கில் கலந்துக்கொண்டு கடந்த வாரத்தில்தான் சென்னை திரும்பினார். அதற்கு முன்பாகவே, கோட் படத்தின் முதல்கட்ட டப்பிங்கை, அதாவது இடைவேளை வரையிலான தனது பின்னணி குரல் பதிவை விஜய் முடித்துவிட்டதாக படக்குழு கூறியது.

- Advertisement -

படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில், அதற்குள் பாதி டப்பிங்கை விஜய் முடித்துவிட்டாரே, என்று பலரும் ஆச்சரியப்பட்ட நிலையில், 2ம் கட்ட டப்பிங் பணியை, ஜூலை மாதம் வைத்துக்கொள்ளலாம் என விஜய், டைரக்டர் வெங்கட்பிரபுவிடம் கூறியிருந்தார். ஜூன் மாதம் தனது பிறந்த நாள் வருவதால், அரசியல் தலைவராக இந்த பிறந்த நாளை பரபரப்பாக கொண்டாட விஜய் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், திடீரென வெங்கட்பிரபுவை அழைத்த நடிகர் விஜய், கோட் படத்துக்கான 2ம் கட்ட டப்பிங்கையும் பேசி முடித்து விடுகிறேன். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார். அதன்பிறகு, 2ம் கட்ட டப்பிங்கையும் விஜய் முடித்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. கோட் படத்தின் பணிகளை இப்படி துரிதமாக, வேகமாக விஜய் முடிக்கிறாரே, அதனால் தனது அடுத்த படத்துக்கு ஸ்பீடு என பெயர் வைத்தாலும் வைத்துவிடுவார் போலிருக்கிறதே, என விஜய் ரசிகர்களே கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்