இயக்குனர் பாலா இயக்கத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்கள் அனைத்துமே, வெற லெவலில் ரசிகர்களை கவனிக்க வைத்த படங்களாகவே இருந்திருக்கின்றன. நல்ல படைப்பாளியாக பாலா தரும் படங்கள், ரசிகர்களின் ரசனை திறனை மேம்படுத்துவது மட்டுமின்றி, அவர் படத்தில் நடிக்கும் கலைஞர்களையும் வேற லெவலுக்கு மாற்றுகின்றன.
அந்த வகையில் பாலா இயக்கிய சேது, நந்தா, பிதா மகன், அவன் இவன், நான் கடவுள், தாரை தப்பட்டை, பரதேசி என அவரது படங்கள் அனைத்துமே ஏதேனும் ஒரு விதத்தில், வெவ்வேறு விதமான கதைக்களத்தில் ரசிகர்களை மகிழ்வித்தன. சகல விஷயங்களையும் உள்ளடக்கிய படமாகவும், ரசிப்பது மட்டுமின்றி அந்த படம் ரசிகர்களுக்கு ஏதேனும் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தும்.
அந்த வகையில் இயக்குனர் பாலா உருவாக்கிய படம்தான் வணங்கான். துவக்கத்தில் இந்த படத்தில் சூர்யா தான் நாயகனாக நடித்தார். ஆனால் ஒரே மாதத்தில் சூர்யா அந்த படத்தில் இருந்து விலகிவிட்டா். சூர்யாவுக்கும், டைரக்டர் பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம்.
ஆனால் அதே கேரக்டரில் பிறகு நடிகர் அருண் விஜயை நடிக்க வைத்தார். வாய் பேசாத இந்த கேரக்டரில் அருண் விஜய் நடிப்பு, வேற லெவலில் இருப்பது சமீபத்தில் வெளியான டீசர் உறுதிப்படுத்தியது. அருண் விஜயை வெச்சு செஞ்சிருக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு, டீசரில் காட்சிகள் ரசிகர்களை அசத்தி விட்டது.
அதற்கு முன்பாகவே, ஒரு கையில் விநாயகர் சிலை, ஒரு கையில் பெரியார் சிலையுடன் சேற்றுக்குள் இருந்து எந்திரிக்கும் அருண் விஜயின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே, வணங்கான் படம் குறித்த பெரிய எதிர்பார்ப்பை, ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டார் டைரக்டர் பாலா. இந்த படத்தில் மிஷ்கின், சமுத்திரக்கனி, சாயா தேவி சரத்குமார், ரோஷினி பிரகாஷ் உள்ளி்ட்டோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் அமைத்துள்ளார்.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் கன்னியாகுமரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வணங்கான் படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில், நாளை மறுதினம் வரும் 8ம் தேதி மாலை 6 மணிக்கு வணங்கான் படத்தின் டிரெய்லர் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளது. இது தமிழ் சினிமா ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.





