- Advertisement -
Homeபொழுதுபோக்குசமீபத்தில் நடந்த ஆபரேஷன், வீட்டில் ஓய்வில் இருக்க வேண்டிய அஜீத்குமார் - திடீர் பைக் டூர்...

சமீபத்தில் நடந்த ஆபரேஷன், வீட்டில் ஓய்வில் இருக்க வேண்டிய அஜீத்குமார் – திடீர் பைக் டூர் போக இதுதான் காரணமா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் கடந்த அக்டோபர் 4ம் தேதி முதல் அஜர்பைஜானில் நடந்த விடாமுற்சி படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார். அங்கு ஷூட்டிங் தொடர்ந்து நடந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக ஷூட்டிங் தடைபட்டது. இடையிடையே கனமழை, பனி, மணல் புயல், குளிர் காரணமாகவும் படப்பிடிப்பு சரிவர நடக்கவில்லை. விடாமுயற்சி படமே டிராப் செய்யப்பட்ட நிலையில், படம் தொடருமா இல்லையா என்பதே கேள்விக்குறியாக மாறிவிட்டது.

படத்தை தயாரித்த லைகா புரடக்சன் தயாரிப்பு நிறுவனம், ஒரே நேரத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையன், அஜீத்குமார் நடிக்கும் விடாமுயற்சி என 2 படங்களை தயாரிப்பதால் நிதி பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. வேட்டையன் படத்தை முடித்த பிறகு, விடாமுயற்சி படப்பிடிப்பை துவங்கலாம் என்று கூறிவிட்டது. இதற்கிடையே இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் திடீரென சில வாரங்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அஜீத்குமார் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மூளையில் இருந்து காதுக்கு செல்லும் நரம்பில் இருந்த கட்டி மற்றும் வீக்கம் சரிசெய்யப்பட்டது. இதற்காக அவருக்கு ஆபரசேன் நடத்தப்பட்டது. இதையடுத்து ஓய்வில் இருக்க வேண்டிய அஜீத்குமார் திடீரென பைக் டூர் கிளம்பி விட்டார்.

நடிகர் விஜய், இப்போது கேரளாவில் கோட் படம் ஷூட்டிங்கில் இருந்து வருகிறார். கேரளா ரசிகர்களை தினமும் அவர் சந்திப்பதும், செல்பி எடுப்பதும், கேரவன் வேன் மீது நின்று பேசுவதும் என தொடர்ந்து அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் டிரண்டிங் ஆகி வருகின்றன. இதனால் பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் என எதிலும் விஜயின் ஆதிக்கமே அதிகமாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் அஜீத்குமார் பைக் டூர் செல்லும் புகைப்படங்கள், பைக் ஓட்டுவது குறித்து பைக் ரைடர் ஒருவருக்கு அஜீத் தரும் டிப்ஸ் மற்றும் அஜீத்குமார் பிரியாணி செய்யும் காட்சிகள் போன்றவை புகைப்படங்கள் வீடியோக்களாக, புகைப்படங்களாக தொடர்ந்து சில தினங்களாக வந்துக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்தான் ஆபரேசன் முடிந்த நிலையில், ஏன் வீட்டில் ஓய்வெடுக்காமல் அஜீத்குமார் இப்படி பைக் டூர் செல்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இப்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது. அதாவது சமூக வலைதளங்களில் தொடர்ந்து விஜய் பற்றிய செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து இடம்பெறுவதால், அதற்கு போட்டியாகவே இந்த விஷயங்களை அஜீத்குமார் செய்வதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அவரது வைரலை தடுக்கவும், குறைக்கவும் தன்னை பற்றிய செய்திகள், தகவல்கள் பரவும் வகையில் பைக் டூர் போன்ற விஷயங்களை அஜீத்குமார் கையில் எடுத்திருப்பதாக, நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்