அரசியலில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வரும் விஜய், வினோத்துடன் தனது கடைசி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கு ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க அரசியல் மற்றும் ஆக்சன் காட்சிகள் இதில் இருக்கும் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் மிகப்பெரிய வசூல் சக்கரவர்த்தியாக விஜய் திகழ்ந்து வருகிறார்.
இப்படியான சூழலில் ஜனநாயகன் அவருக்கு கடைசி திரைப்படம் என்பதால், அதன் மீது ஒட்டுமொத்த இந்திய திரை உலகமே தனது பார்வையை வைத்திருக்கிறது. அதுபோக ரசிகர்களும் அந்த திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதனால் ஜனநாயகனின் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அது உண்மைதான் என்பதன் போலவே சமீபத்தில் வெளியான தகவல்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தின. அதாவது ஜனநாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிமம் மட்டும் கிட்டத்தட்ட 121 கோடி ரூபாய்க்கு சென்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேசான் நிறுவனம் அத்தனை கோடி ரூபாயை கொடுத்து அதன் உரிமத்தை கைப்பற்றி இருப்பதாக சொல்கிறார்கள்.
இதுபோக ஜனநாயகன் திரைப்படத்தின் சாட்டிலைட் டிஜிட்டல் உரிமையை சன் டிவி நிறுவனம் தன்வசப்படுத்தியுள்ளதாம். இதற்காக 55 கோடி ரூபாய் கை மாறி இருப்பதாக சொல்கிறார்கள். இப்படிப் பார்த்தால், ஜனநாயகன் திரைப்படம் தற்போதே கிட்டத்தட்ட 175 கோடி ரூபாய்க்கு மேல் பிசினஸ் ஆகி இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மமீதா பைஜூ, பிரியாமணி, கௌதம் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்டோரும் இடம் பெற்று இருக்கிறார்கள். அரசியலில் களம் இறங்கி இருக்கும் விஜய் பிற நாடுகளுக்கு சூட்டிங்கிற்காக செல்ல முடியாது என்பதால், சென்னையை அடுத்த பையனூரில் முழு திரைப்படமும் எடுக்கப்பட்டிருக்கிறது.
அனேகமாக மே மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு பணிகள் நிறைவடையும் என்று சொல்கிறார்கள். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு அருண்பாண்டியன் என்னும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது. அதுவும் அவர் வருமான வரித்துறை அதிகாரியாக நடிப்பதாக சொல்கிறார்கள். இந்த தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதேசமயம் வினோத் என்ன செய்து வைத்திருக்கிறார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.





