- Advertisement -
Homeபொழுதுபோக்குஜவான் படத்திற்காக கோதாவில் குதிக்கவுள்ள தளபதி விஜய். இது வேறயா? - பட்டையை கிளப்பப்போகும் பங்ஷன்

ஜவான் படத்திற்காக கோதாவில் குதிக்கவுள்ள தளபதி விஜய். இது வேறயா? – பட்டையை கிளப்பப்போகும் பங்ஷன்

- Advertisement -

இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள “ஜவான்” திரைப்படமானது வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தமிழ் திரையுலகின் முன்னணி இளம் இயக்குனர்களில் ஒருவரான அட்லீ தற்போது இந்த ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாகவும், நயன்தாரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

அவர்களுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி, யோகி பாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி என பல்வேறு பிரபலங்களும் நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

அதோடு தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இந்த படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். அவரது இசையமைப்பும் இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. பேன் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த ஜவான் படம் தற்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வேளையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்காக படக்குழுவானது இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் சென்னை வரும் ஜவான் படக்குழுவினருடன் நடிகர் விஜய்யும் ப்ரோமோஷனில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஜவான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் ஷாருக்கானுடன் இணைந்து நடித்திருப்பதாக பேசப்பட்டு வரும் வேளையில் தற்போது பிரமோஷனுக்காகவும் அவர் ஷாருக்கானுடன் இணைய இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த செய்தி வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் இந்த விடயம் பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு சென்னையில் நடக்கும் இந்த பங்க்ஷனில் விஜய் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றினால் நிச்சயம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் உயரத்தை தொடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்