- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் மக்கள் சந்திப்பு பயணம்… 12 நிபந்தனைகளை வெளியிட்ட தவெக தலைமை - விதிமுறைகளை கட்டாயம்...

விஜய் மக்கள் சந்திப்பு பயணம்… 12 நிபந்தனைகளை வெளியிட்ட தவெக தலைமை – விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுகோள்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நாளை நாகை திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் தவெக கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தவெக தலைவர் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். தமிழக மக்களை உயிராக மதிக்கும் அவர் தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்து கொள்ளாதவர்.

எனவே இந்த மக்கள் சந்திப்பு பயணத்தின் போது தொண்டர்களும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும்போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டு செல்லும்போது அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகனங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின் தொடர வேண்டாம்.

- Advertisement -

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் காம்பவுண்ட் சுவர்கள் மரங்கள் மின்விளக்கு கம்பங்கள் மின்கம்பங்கள் மின் மாற்றிகள் பஸ் வேன் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மற்றும் தடுப்புகள் உயரமான இடங்களில் மேலே ஏறக்கூடாது. முதியவர்கள் உடல்நலம் குன்றியவர்கள் பள்ளி சிறுவர் சிறுமியர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்து கொள்வதை தவிர்த்து வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழலாம்.

ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்வித போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். காவல்துறையின் அறிவுறுத்தலின்படி அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும்.

- Advertisement -

போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக்கூடாது. கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் நோக்கத்தில் யாரேனும் செயல்பட்டால் அதற்கு இடம் கொடுக்காதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளிலும் பிற சாலைகளிலும் பிளக்ஸ் பேனர் அலங்கார வளைவு கொடி கட்டப்பட்ட கம்பிகள் வைக்கக்கூடாது.

விஜய் வருகையின் போது தொண்டர்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். போலீஸ் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பிறகு அனைவரும் அமைதியான முறையில் யாருக்கும் எவ்வித இடையூறு ஏற்படுத்தாமல் நிதானமாக கலைந்து செல்ல வேண்டும். இதற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று ஆனந்த் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்