நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்து வருகிறார். விஜய் படங்கள் என்றாலே மாஸ் ஹிட் தான் என்பது தமிழ் சினிமாவின் வரலாறு இருக்கிறது. லியோ போன்ற மொக்கை படங்கள் கூட 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அபிமானமும் அங்கீகாரமும் இருந்து வருகிறது.
இப்போது நடிகர் விஜய் நடித்து வரும் படம் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். சினேகா மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ரம்யா கிருஷ்ணன், லைலா உள்பட ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கிறது. இந்த படத்தைத் தொடர்ந்து விஜய் தனது 69 வது படம் கடைசி படம் என தீர்மானித்துள்ளார். வருகிற 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மூலம் முதல்வர் நாற்காலியில் அமர விஜய் திட்டமிட்டு வருகிறார்.
நடிகர் விஜய் நடித்த படங்களில் கத்தி, துப்பாக்கி, சர்கார் ஆகிய மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களை இயக்கியவர் ஏஆர் முருகதாஸ். சர்கார் படத்தை தொடர்ந்து, மீண்டும் விஜய் – முருகதாஸ் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக திட்டமிடப்பட்டது. அப்போது சன் பிக்சர்ஸ் அந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தது.
இந்நிலையில் ஏ ஆர் முருகதாஸ் சொன்ன கதையில் முதல் பாதியை கேட்டு, விஜய் அசந்து போய், அந்த படத்தை செய்யலாம் என்று சந்தோஷமாக கூறியிருக்கிறார். அதன் பிறகு படத்தின் இரண்டாம் பாதியை சொன்ன போது விஜய் அதில் நிறைய திருத்தங்களை சொல்லி இருக்கிறார். அந்த திருத்தங்களுடன் மீண்டும் விஜயிடம் முருகதாஸ் கதை சொல்ல போனபோது மீண்டும் அதிலும் திருத்தங்கள் சொல்லி இருக்கிறார்.
விஜய்க்கு கத்தி, துப்பாக்கி, சர்கார் என்று மூன்று மெகா ஹிட் படங்களை விஜய்க்கு கொடுத்த நிலையில், இந்த படத்தின் கதையில் ஏன் இத்தனை திருத்தங்கள், மாற்றங்கள் சொல்கிறார் என்று நொந்து போன ஏஆர் முருகதாஸ் நான் பல வெற்றிப்படங்களை தந்த இயக்குனர். நம்மை ஏன் இப்படி அவமதிக்கிறார் என்று ஒரு கட்டத்தில் விஜய் மீது கடும்கோபம் கொண்ட முருகதாஸ், விஜயுடன் இனி படம் பண்ண வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
அதே நேரத்தில் அதுவரை வெற்றி பெற இயக்குனராக இருந்த ஏஆர் முருகதாஸ், ரஜினிகாந்த் நடித்த சர்கார் என்ற பிளாப் படத்தை தந்தார். இந்த படத்தை பார்த்து நொந்து போன ரசிகர்கள் ஏஆர் முருகதாஸ் இப்படி ஒரு படத்தை தந்திருக்கிறாரே என்று தலையில் அடித்துக் கொண்டனர். அதுவரை ஏஆர் முருகதாஸ் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த விஜயும், சர்கார் போல நமக்கும் பிளாப் படம் தந்து விடுவாரோ என்ற அச்சத்தில்தான் ஏஆர் முருகதாஸை கழட்டிவிட முடிவு செய்திருக்கிறார், இந்த காரணங்களால் தான் ஏ.ஆர். முருகதாஸ் விஜய் கூட்டணி முறிந்து போனது, இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.





