- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் பொங்கலுக்கு ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகுமா? அரசியல் குறுக்கீடுகளால் தவிக்கும் தயாரிப்பு நிறுவனம் -...

வரும் பொங்கலுக்கு ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகுமா? அரசியல் குறுக்கீடுகளால் தவிக்கும் தயாரிப்பு நிறுவனம் – கடைசியில் அந்த இடத்தில் வேலையை காட்டீட்டாங்களே?

- Advertisement -

அரசியல் களத்தில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் நடிகர் விஜய் என்றால் அது மிகையல்ல. எம்ஜிஆர் விஜயகாந்த் என்ற 2 தலைவர்களுக்கு பிறகு இன்றைய காலகட்டத்தில் நடிகர் விஜய்க்கு ஒரு மாஸ் வரவேற்பு தமிழ்நாட்டில் தொடர்ந்து கிடைத்து வருகிறது. அதனால் அவர் தமிழக முதல்வராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இது ஆளுங்கட்சி திமுகவுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. வெளிநாடுகளுக்கு இந்த படம் சில வாரங்களுக்கு முன்பே சென்சாருக்கு அனுப்பப்பட்டு விட்டது. அதே போல் இந்தியாவிலும் இந்த படத்தை வெளியிட சென்சார் போர்டுக்கு இந்த படத்தை படக்குழு ஏற்கனவே அனுப்பி விட்டது.

- Advertisement -

ஜனநாயகன் படத்தில் ஆபாச காட்சிகள், வசனங்கள் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லாத நிலையில் சண்டை காட்சிகளில் மட்டுமே வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக சென்சார் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி படத்தில் நீக்கப்பட வேண்டிய காட்சிகள் மியூட் செய்ய வேண்டிய வசனங்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தணிக்கைக்குழு அறிவுறுத்தியபடி குறிப்பிட்ட சண்டை காட்சிகளில் வன்முறை காட்சிகளை குறைத்து விட்டு மீண்டும் சென்சாருக்கு படக்குழு ஜனநாயகன் படத்தை அனுப்பி விட்டது. ஆனால் இன்று மாலை வரை சென்சார் போர்டில் இருந்து சான்றிதழ் வழங்கப்படவில்லை. சான்றிதழுக்காக அங்கு சென்ற படக்குழுவுக்கு சரியான பதிலும் கிடைக்கவில்லை.

- Advertisement -

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் தராமல் இழுத்தடித்து அலைக்கழிக்கப்படுகின்றனர். பலமுறை கேட்டும் தணிக்கை அலுவலகத்தில் சரியான பதில் கிடைக்கவில்லை. ஜனநாயகன் படம் ரிலீஸ்க்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. இந்நிலையில் சென்சார் தராமல் கால தாமதம் செய்வது தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரிய நெருக்கடியை தந்துள்ளது.

வருகிற 8ம் தேதி இரவு அல்லது 9ம் தேதி காலை வரை சான்றிதழ் தராமல் தணிக்கை குழு அதிகாரிகள் இழுத்தடித்து விடுவார்களா, அரசியல் அழுத்தம் காரணமாகவே இதுபோல சென்சார் குழு அதிகாரிகள் ஜனநாயகன் படத்துக்கு நெருக்கடி தருகின்றனர். இப்படி செய்வதால் படத்தின் வசூலை கெடுக்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே 14ம் தேதி வர வேண்டிய பராசக்தி படம் 10ம் தேதி ரிலீஸ் என மாற்றப்பட்டதற்கும் இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்