- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று அதிகாலை சத்ரு சம்ஹார பூஜையில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய்...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று அதிகாலை சத்ரு சம்ஹார பூஜையில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய் – வேல் ஏந்தி முருகனை வழிபட்ட தளபதி!

- Advertisement -

சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில் வருகிற மே 4ம் தேதி பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் நேற்றிரவு தவெக தலைவர் நடிகர் விஜய் சென்னையில் இருந்து விமானம் வழியாக மதுரைக்கு புறப்பட்டார். அதன் பிறகு மதுரையில் இருந்து அவர் காரில் திருச்செந்தூருக்கு செல்வதாக தகவல் பரவியது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரான நடிகர் விஜய் இன்று அதிகாலை அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். திருச்செந்தூரில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள செந்தில் ஆண்டவர் என அழைக்கப்படும் இக்கோவில் அறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆன்மீக தலமாகும்.

- Advertisement -

எதிரிகள் மற்றும் தீய சக்திகளிடமிருந்து விடுபடவும் உடல் நலம் மற்றும் நீதிமன்ற வழக்குகளில் இருந்து பாதுகாப்பும் சாதகமான தீர்ப்புகளை பெறவும் செய்யப்படும் மிகவும் சக்தி வாய்ந்த சத்ரு சம்ஹார பூஜையை நடிகர் விஜய் இன்று காலை அங்கு மேற்கொண்டார். கையில் வேல் ஏந்தி வழிபாடு நடத்தினார்.

அரசியல் களத்தில் தனக்கு ஏற்படக்கூடிய முட்டுக்கட்டைகளை நீக்கி வெற்றியை உறுதி செய்வதற்காக இந்த சிறப்பு வழிபாட்டை அவர் முதன் முறையாக திருச்செந்தூரில் நடத்தியதாக கூறப்படுகிறது. அரசியல் களத்தில் ஜோசப் விஜய் என்று அடையாளப்படுத்தப்படும் விஜய், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பு பூஜையில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எதிர்வரும் காலங்களில் அவரது அரசியல் நகர்வுகளுக்கான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும், வரப்போகும் தடைகளை தகர்த்து, தமிழகத்தை ஆட்சி செய்யும் தலைமை பொறுப்புக்கு வலுவாக வர வேண்டும் என்ற அடிப்படையில் நடிகர் விஜய் மேற்கொண்ட இந்த ஆன்மீக பயணமும் வழிபாடும் அவரது கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களிடையே பலத்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய்க்கு அரசியல் களத்தில் நல்ல வரவேற்பும் ஆதரவும் இருந்து வருவதால் தேர்தல் முடிவுகள் அவருக்கு சாதகமாக மாறுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. எனினும் கருணை கடலே கந்தா போற்றி என அழைக்கப்படும் செந்தில் ஆண்டவரின் பூரண அருளை பெறவும் வருகிற தேர்தலில் வெற்றி பெறவும் வேண்டி தவெக தலைவர் விஜய் இந்த பூஜையில் பங்கேற்றதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்