- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் நிவின் பாலியுடன் கைகோர்த்த நயன்தாரா... இந்த முறை அவரோட கதாபாத்திரமே மிரட்டுதே... சொல்லி அடித்த...

மீண்டும் நிவின் பாலியுடன் கைகோர்த்த நயன்தாரா… இந்த முறை அவரோட கதாபாத்திரமே மிரட்டுதே… சொல்லி அடித்த டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தின் டீசர்…

- Advertisement -

மலையாளத் திரை உலகை தாண்டி தமிழ் சினிமாவுக்கும் நன்கு பரிட்சயமானவர் நிவின்பாலி. இதற்கு மிக முக்கியமான காரணம் அவரது பிரேமம் திரைப்படம் தான். அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நிவின் பாலி நடித்திருந்தார். தமிழில் வெளியான ஆட்டோகிராப் திரைப்படத்தின் மையக் கருவை கதையாக கொண்டே இது திரைப்படம் எடுக்கப்பட்டது.

மலையாள சினிமாவாக இருந்தாலும் இது தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் இருந்ததால் இங்கும் சக்கை போடு போட்டது. குறிப்பாக அதில் சாய் பல்லவி நடித்திருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அவர் வரும் காட்சிகள் பெரும்பாலும் தமிழிலேயே இருந்ததால், இங்குள்ள ரசிகர்களுக்கு இது ஈசியாக கனெக்ட் ஆகும் வகையில் அமைந்தது.

- Advertisement -

இதேபோல் நேரம் திரைப்படமும், நேரடி தமிழ் சினிமாவாக எடுக்கப்பட்டு வெளியானது. ஒருவனுக்கு நேரம் சரியில்லை என்றால் என்னவெல்லாம் நடக்கும், அதே நேரம் சரியாக அமைந்துவிட்டால் என்னென்ன விஷயங்கள் எல்லாம் தானாக அமைந்து விடும் என்பதை மிக சுவாரசியமாக அந்த திரைப்படத்தில் சொல்லி இருந்தார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.

இதனைத் தொடர்ந்து ரிச்சி என்னும் திரைப்படத்திலும் நிவின் பாலி நடித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழுமலை திரைப்படத்தில் நிவின் பாலி நடித்திருக்கிறார். ஆனால் இந்த திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இதே போல் லோகேஷ் கனகராஜ் தயாரித்து வரும் பென்ஸ் திரைப்படத்திலும் நிவின்பாலிக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் அடுத்ததாக நிவின் பாலி நடிக்கும் திரைப்படம் ஒன்று நேரடியாக தமிழிலும் வெளியாகிறது. டியர் ஸ்டுடென்ட்ஸ் என இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் லவ் ஆக்சன் டிராமா எனும் மலையாள திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இப்படியான சூழலில்தான் தற்போது மீண்டும் இவர்கள் இணைந்து இருக்கிறார்கள். மாணவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தில் நயன்தாராவுக்கு போலீஸ் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்கள். அவர் சண்டை போடும் காட்சியும் டீசரில் இருக்கிறது. ரசிக்கும் வகையில் இது அமைந்திருப்பதால் டியர் ஸ்டூடன்ஸ் திரைப்படம் இப்போதே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

- Advertisement -

சற்று முன்