- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்துள்ள படத்தில் விஜய் கட்சி கொடியா? விஜய்க்கு ஆதரவாக களம்...

விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்துள்ள படத்தில் விஜய் கட்சி கொடியா? விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கி விட்டாரா? அட நடந்த சம்பவமே வேறங்க!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய், இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் தமிழ் சினிமாவுக்கு குட்பை சொல்லும் விஜய், அரசியல் களத்தில் தீவிரம் காட்டுகிறார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகிறார். இந்த ஆண்டின் துவக்கத்தில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த நடிகர் விஜய், கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை கிராமத்தில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்தி முடித்தார். பல லட்சம் மக்கள் திரளாக பங்கேற்ற இந்த மாநாட்டில் விஜய் 48 நிமிடங்கள் ஆவேசமாக பேசி தனது அரசியல் கொள்கைகளை, நிலைப்பாட்டை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

- Advertisement -

இந்நிலையில், ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, பீனிக்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அந்த படம் வருகிற 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நாளில் சூர்யா நடித்த கங்குவா படமும் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்துள்ள பீனிக்ஸ் படத்தில், பல காட்சிகளில் ஒரு கட்சிக்கொடி திரையில் வருகிறது. அது சிவப்பு, மஞ்சள் நிறத்துடன் நடிகர் விஜயின் கட்சிக்கொடி போன்ற நிறங்களை கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கு படத்தை தணிக்கை செய்ய பார்வையிட்ட சென்சார் போர்டு இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

ஆனால் விஜய் கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தும் முன்பே, இந்த படத்தில் ஒரு கட்சிக் கொடியை உருவாக்கி படம் முழுவதும் வரும்படி காட்டிய நிலையில், அதுவும் விஜயின் கட்சிக் கொடியும் ஒன்று போலவே அமைந்து இப்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதில் விஜய் சேதுபதி மகன், விஜய் கட்சியில் இணைந்து விட்டதாகவும் ஒரு புரளியை கிளப்பி விட்டுள்ளது.

இதையடுத்து பீனிக்ஸ் படக்குழு அந்த படத்தில் வரும் கட்சி கொடி காட்சிகளில் சிஜி ஒர்க் மூலமாக, கொடியில் தெரியும் மஞ்சள், சிவப்பு நிறங்களை மாற்றி, வேறு நிறங்களை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக மட்டுமே ரூ. 10 லட்சம் கூடுதல் செலவாக இந்த படத்துக்கு செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. விஜய் சேதுபதி மகன் சூர்யா நடிக்கும் முதல் படத்திலேயே இப்படி ஒரு சிக்கலா என தமிழ் சினிமா ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்