- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித்தின் மாஸ் ஹிட் படத்தை தவறவிட்ட விஜய், இந்த படத்தை மட்டும் தளபதி பண்ணிருந்தா வேற...

அஜித்தின் மாஸ் ஹிட் படத்தை தவறவிட்ட விஜய், இந்த படத்தை மட்டும் தளபதி பண்ணிருந்தா வேற லெவல்ல இருந்துருக்குமே

- Advertisement -

ஒரு இயக்குனர் ஒரு நடிகருக்கு கதை சொல்கிறார் என்றால் அந்த கதை அந்த நடிகருக்கு பிடித்துவிட்டது என்றால் அந்த கதையில் நடிக்க ஒப்புக்கொள்வார். ஒரு வேளை அந்த கதை அந்த நடிகருக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த இயகுனர் வேறொரு நடிகரிடம் அந்த கதையை கொண்டுப்போவார். அந்த நடிகருக்கு அந்தக தை பிடித்துப்போய் அதில் நடிக்க, அந்த படம் ஹிட் அடிப்பது உண்டு.

அந்த வகையில் ஒரு இயக்குனர் முதலில் விஜய்யிடம் ஒரு கதையை கூற, அந்த கதை அவருக்கு பிடிக்காமல் போக, அதன் பின் அந்த இயக்குனர் அந்த கதையை அஜித்திடம் கூறியிருக்கிறார். அஜித்திற்கு அந்த கதை பிடித்துப்போக அதில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அஜித், விஜய் ஆகியோர் ஒரே சமயத்தில்தான் சினிமாவுக்குள் ஹீரோவாக நுழைந்தனர். இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் கூட நடித்தனர். அதன் பின் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாகவும் போட்டி நடிகர்களாகவும் உருவாகினர்.

தற்போது தமிழ் சினிமாவின் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர்களாக இருவரும் திகழ்ந்து வருகின்றனர். கடந்த பொங்கல் பண்டிகை அன்று கூட விஜய்யின் “வாரிசு”, அஜித்தின் “துணிவு” ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் மோதின. இரண்டு திரைப்படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே பல வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சரவண சுப்பையா விஜய்யிடம் ஒரு கதையை கூறியிருக்கிறார். அந்த கதை விஜய்க்கு பிடிக்கவில்லையாம். அதன் பின் அந்த கதை அஜித்திடம் சென்றிருக்கிறது.

அந்த கதை அஜித்திற்கு பிடித்துப்போக அவர் அத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அத்திரைப்படம்தான் “சிட்டிசன்”. இத்திரைப்படம் அஜித்தின் கெரியரில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்