- Advertisement -
Homeபொழுதுபோக்குஏ... யாரு தாம்பா அந்த லட்சுமி... ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் விஜய் சேதுபதியின் மகாராஜா பட...

ஏ… யாரு தாம்பா அந்த லட்சுமி… ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் விஜய் சேதுபதியின் மகாராஜா பட டிரைலர்…

- Advertisement -

ஒரு காலத்தில் மூச்சுக்கு 300 திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதி, இப்போது அடுக்கடுக்கான படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு விட்டார். கடந்த காலங்களில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அந்த அளவு ஹிட்டாகவில்லை.

 

- Advertisement -

விஜய் சேதுபதியும் தனது ஹீரோ இமேஜை மாற்றிக்கொண்டு, வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இது சில திரைப்படங்களில் அவருக்கு கை கொடுத்தது, சில திரைப்படங்களில் காலை வாரியது. குறிப்பாக மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக மிரட்டி இருந்தார் விஜய் சேதுபதி.

 

- Advertisement -

ஆனால், அட்லியை நம்பி ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் படத்தில் விஜய் சேதுபதி நடித்தது அந்த அளவு பெரிதாக பேசப்படவில்லை. இதனால் தனது முடிவை மாற்றிக் கொண்டார் விஜய் சேதுபதி. இனிமேல் குண சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களின் நடிக்கப் போவதில்லை என்று அவர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

 

இப்படியான சூழலில் தனது ஐம்பதாவது திரைப்படத்தை அவர் குரங்கு பொம்மை படத்தை எடுத்த நிகிலன் சாமிநாதனிடம் கொடுத்திருக்கிறார். 2017 ஆம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை திரைப்படம், விமர்சன ரீதியாக மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதன் காரணமாகவே, விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படம் மீது கவனம் திரும்பியது.

 

இந்தப் படத்திற்கு மகாராஜா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் நட்டி, அபிராமி, பாய்ஸ் மணிகண்டன் உள்பட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. அதில் முகத்தில் காயத்துடன் விஜய் சேதுபதி, சலூன் கடைக்காரர் தோற்றத்தில் இருந்தார்.

 

இப்படியான சூழலில் தற்போது மகாராஜா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. அதில் எடுத்ததுமே, காவல் நிலையத்திற்கு விஜய் சேதுபதி செல்வது போன்ற காட்சிய இடம் பெற்றுள்ளது. லட்சுமியை காணும் இன்று விஜய் சேதுபதி சொல்ல அது யார் என்பதிலிருந்து படம் ஆரம்பிப்பது போல் ட்ரெய்லர் காட்டுகிறது. க்ரைம் திரில்லராக எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம், அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.

- Advertisement -

சற்று முன்