- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் சேதுபதியை குறிவைத்த சல்மான் கான், ஹிந்தியிலும் ஒரு கை பாத்திடலாம்ன்னு முடிவெடுத்த மக்கள் செல்வன்

விஜய் சேதுபதியை குறிவைத்த சல்மான் கான், ஹிந்தியிலும் ஒரு கை பாத்திடலாம்ன்னு முடிவெடுத்த மக்கள் செல்வன்

- Advertisement -

விஜய் சேதுபதி தற்போது இந்திய சினிமாவின் பிசியான நடிகராக வலம் வருபவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். தமிழில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் பல புராஜெக்ட்டுகளில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. “மெர்ரி கிருஸ்துமஸ்”, “மும்பைக்கர்”, “ஜவான்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி “காந்தி டாக்ஸ்” என்ற மௌனத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இதில் “ஜவான்” திரைப்படத்தில் விஜய் சேதுபதி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளிவர உள்ளது. ஷாருக்கான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தது பாலிவுட்டில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. “ஜவான்” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு பல பாலிவுட் பட வாய்ப்புகள் தேடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி குறித்தான ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு விஜய் சேதுபதியை மிகவும் பிடித்துவிட்டதாம். மேலும் விஜய் சேதுபதி பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என்றும் கணித்திருக்கிறார். ஆதலால், விஜய் சேதுபதியை அணுகி, தனது திரைப்படத்தில் வில்லனாக நடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம் சல்மான் கான்.

ஆனால் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதில் இனி ஆர்வம் காட்டக்கூடாது என தனக்கு தானே முடிவு எடுத்திருக்கிறாராம். எனினும் சல்மான் கானிடம் வில்லனாக நடிக்க 30 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறாராம். விஜய் சேதுபதி தற்போது 20 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வருகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் சல்மான் கான் படத்தில் வில்லனாக நடிக்க 30 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார். விரைவில் இந்த புராஜெக்ட்டை குறித்த அப்டேட் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

சற்று முன்