- Advertisement -
Homeபொழுதுபோக்குதயாரிப்பாளரிடம் கண்ணாமூச்சி விளையாடும் விஜய் சேதுபதி ஒரே குழப்பமா இருக்கே, இதுக்கு ஒரு முடிவே கிடையாதாப்பா?

தயாரிப்பாளரிடம் கண்ணாமூச்சி விளையாடும் விஜய் சேதுபதி ஒரே குழப்பமா இருக்கே, இதுக்கு ஒரு முடிவே கிடையாதாப்பா?

- Advertisement -

விஜய் சேதுபதி இந்திய சினிமாவின் மிக பிசியான நடிகராக வலம் வருகிறார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். தற்போது ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் “மெர்ரி கிருஸ்துமஸ்”, “ஜவான்”, “மும்பைக்கர்” போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இத்திரைப்படங்களை தொடர்ந்து புதிய திரைப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி மிக மும்முரமாக கதை கேட்டுக்கொண்டிருக்கிறாராம். இந்த நிலையில் வலைப்பேச்சு சக்தி தனது வலைப்பேச்சு வீடியோவில் விஜய் சேதுபதி குறித்த ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

பல நாட்களுக்கு முன்பு டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் விஜய் சேதுபதியை வைத்து ஒரு புதிய படத்தை தயாரிக்க முடிவு செய்து அவரை அணுகினார்களாம். அதுமட்டுமல்லாது ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸாகவும் தந்தார்களாம்.

ஆனால் சில காரணங்களால் அந்த புராஜெக்ட் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு டிரைடன்ட் நிறுவனம் அந்த புராஜெக்ட்டை தொடங்கலாம் என முடிவெடுத்தார்களாம்.

- Advertisement -

அதன்படி டிரைடன்ட் நிறுவனம் இரண்டு இயக்குனர்களிடம் கதை கேட்டிருக்கிறார்கள். அந்த கதை அவர்களுக்கு பிடித்துப்போக விஜய் சேதுபதிக்கு கதை சொல்ல அவர்களை அனுப்பினார்களாம். ஆனால் விஜய் சேதுபதிக்கோ அவர்கள் கூறிய கதை பிடிக்கவில்லையாம்.

அதன் பின் விஜய் சேதுபதி வேறு இரண்டு இயக்குனர்களிடம் கதை கேட்டிருக்கிறார். அவர்கள் கூறிய கதை விஜய் சேதுபதிக்கு பிடித்துப்போக, அவர்களை டிரைடன்ட் நிறுவனத்தினரிடம் சென்று கதை கூறுமாறு அனுப்பியிருக்கிறார்.

ஆனால் அவர்கள் கூறிய கதை தயாரிப்பு நிறுவனத்தாருக்கு பிடிக்கவில்லையாம். ஆதலால் தனது அடுத்த படத்தை எந்த இயக்குனரிடம் கொடுக்கலாம் என்று விஜய் சேதுபதி குழப்பத்தில் இருக்கிறாராம்.

- Advertisement -

சற்று முன்