இப்போதெல்லாம் ஒரு படத்தில் நடித்து அந்த படம் வெற்றி பெற்று விட்டாலே சில இளம் நடிகர்களுக்கு கொம்பு முளைத்தது போல் ஆகி விடுகிறது. தமிழ் சினிமாவே இனி நம்மை நம்பிதான் இருக்கிறது என்பது போன்ற மனநிலைக்கு மாறி விடுகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த அளவுக்கு அதகளம் செய்கின்றனர். பெரிய பந்தா காட்டி படக்குழுவினரை வெறுப்படைய செய்கின்றனர்.
குறிப்பாக இந்த பந்தா பேர்வழி நடிகர்களால் கடுமையாக பாதிக்கப்படுவது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்தான். ஏனெனில் படப்பிடிப்பை சரியான நேரத்துக்குள் முடிக்க விடாமல், இயக்குனரை மூடு அவுட் செய்வார்கள். தயாரிப்பு செலவை எகிற வைத்து, தயாரிப்பாளர்களை கடன்காரர்களாக மாற்றி விடுவார்கள்.
ஆனால் இதுவரை பல நல்ல படங்களில் நடித்து நல்ல நடிகராக வளர்ந்து வருபவர் மணிகண்டன். காலா, ஜெய்பீம், குட்நைட், லவ்வர் போன்ற வெற்றி படங்களில் நடித்த அவர், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு டச்சப் பாய் ஒருவருடன் மட்டுமே வருகிறார். பவுன்சர்கள், உதவியாளர்கள் என ஒரு பெரிய கூட்டத்துடன் வந்து அவர்களுக்கு ரூ. 50 ஆயிரம், ரூ. 60 ஆயிரம் சம்பளம் என தயாரிப்பாளர்களுக்கு வேட்டு வைப்பதில்லை.
அதே நேரத்தில் நடிகர் கவினும் வளர்ந்துவரும் இளம் நடிகராக இருந்த போதிலும் அவர் குறித்து தொடர்ந்து விமர்சனங்களும், சர்ச்சைகளும் எழுந்தபடியே இருக்கின்றன. குறிப்பாக அவரது மேனேஜராக இருக்கும் குபேந்திரன் என்பவர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என யார் போன் செய்தாலும் எடுப்பதில்லை.
அதே போல் இதற்காக தான் போன் செய்கிறோம் என்று கவினுடன் பேச வேண்டும் என்று இயக்குனர் அல்லது தயாரிப்பாளர் வாட்சப் செய்தி அனுப்பினாலும் எந்த ரெஸ்பான்ஸ்சும் காட்டுவது இல்லை. இந்த தவறை அவரே செய்கிறாரா, அல்லது கவின் கூறுவதால் அவர் இப்படி நடந்து கொள்கிறாரா, யார் போன் செய்தாலும், செய்தி அனுப்பினாலும் கவின் ஆலோசனைப்படி தான் இப்படி அலட்சியப்படுத்துகிறாரா என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.
வளர்ந்து நடிகராக கவின் இதுவரை நடித்து 4 படங்கள் மட்டுமே திரைக்கு வந்துள்ளன. டாடா, லிப்ட், ஸ்டார் மற்றும் பிளடி பெக்கர். இதில் பிளடி பெக்கர் தீபாவளிக்கு வந்தவுடனே காணாமல் போய்விட்டது. சமீபத்தில் ஓடிடியில் வெளியான நிலையில், டிவியிலேயே பார்க்க முடியலே, தியேட்டர்ல எப்படி உட்கார்ந்து பார்த்தாங்களோ பாவம், என பலரும் கலாய்த்து வருகின்றனர். எனவே, இதுபோன்ற அலட்சிய போக்கை தவிர்ப்பதே நல்ல நடிகராக வளர்ச்சியடைய உதவும் என்றும் கூறுகின்றனர்.





