- Advertisement -
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், நடிகர் விஜயின் அரசியல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பேசவும் விரும்பலே. அரசியல் கட்சிகள் விமர்சனங்களை ஆரோக்கியமாக எடுத்துக் கொள்வது இல்லை என்பதால் அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை. எனது தொண்டு நிறுவனம் மூலம் மக்களுக்கு உதவுவதே போதுமானது என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.





