கடந்த ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் மாஸ் ஹிட் படமாக அவருக்கு இருந்தது. நித்திலன் சாமிநாதன் இயக்கிய இந்த படம் விஜய் சேதுபதியின் 50வது படமாகவும் இருந்தது. மகாராஜா படத்தின் அபார வெற்றிக்கு பிறகு அவரது நடிப்பில் 51வது படமாக ஏஸ் படம், கடந்த மாதம் 23ம் தேதி வெளியானது.
பெரிய பட்ஜெட்டில் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட இந்த படத்தில் போல்ட் கண்ணன் என்ற கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படம் பயங்கர பிளாப் படமாக இருந்தது. சில கோடிகள் மட்டுமே வசூலித்த நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள் அரண்டு போய்விட்டனர்.
இந்த சூழலில் ஏஸ் படம் தந்த தோல்வியால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பயங்கரமான விரக்தியில் இருந்து வருகிறார். இதற்கிடையே மிஷ்கின் இயக்கிய டிரெயின் படமும் பாண்டிராஜ் இயக்கிய தலைவன் தலைவி படம் ரெடியாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. ஆனால் ஏஸ் படம் தந்த தோல்வியால், அந்த படங்களின் டிஜிட்டல் சாட்டிலைட் வியாபாரம் படுத்து விட்டது.
வெற்றிப் படங்களை தந்தால் மட்டுமே தமிழ் சினிமாவில் நீடித்திருக்க முடியும் என்ற சூழல் ஜாம்பவான் நடிகர்களுக்கும், ஜாம்பவான் இயக்குனர்களுக்குமே ஏற்பட்டிருக்கிறது. மொக்கை படங்களை தந்த இயக்குனர்கள் ஷங்கர், மணிரத்னம் நடிகர்கள் கமல் சூர்யா போன்றவர்கள் ட்ரோலில் சிக்கி சின்னாபின்னமாகி வரும் நிலையில், விஜய் சேதுபதிக்கு ஏஸ் படம் தந்த தோல்வி பீதியை தந்திருக்கிறது.
இந்த சூழலில் நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே கதை கேட்டு ஓகே சொன்ன 2 படங்களை இப்போது வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். அந்த கதைகளை சொன்ன இயக்குனர்களை நேரில் அழைத்து, இந்த படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி கொடுத்திருக்கிறார்.
விஜய் சேதுபதி ஓகே சொன்னதால், படப்பிடிப்பு பணிகளை துவங்கிய அந்த 2 இயக்குனர்களும் இப்படி கடைசி நேரத்தில் கதை பிடிக்கவில்லை என்று மறுக்கிறீர்களே என்று விஜய் சேதுபதியிடம் கேட்டதற்கு, நீங்கள் சொன்ன கதை அப்போது ஆரம்பத்தில் என்னை இம்ப்ரஸ் செய்தது. ஆனால் இப்போது அந்த கதை மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. அதனால் அப்போ ஓகே சொன்னேன், இப்போ நோ சொல்றேன், என்று கூறி எஸ்கேப் ஆகியிருக்கிறார். ஏஸ் படம் தோல்விக்கு நம்மை டீலில் விட்டுட்டாரே என அந்த இயக்குனர்கள் புலம்பி கொண்டிருக்கின்றனர்.





