கடந்த 2017ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் பிக்பாஸ் என்ற ரியாலிடி ஷோ நடத்தப்பட்டு வருகிறது. 20க்கும் மேற்பட்ட போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் 100 நாட்களுக்குள் மேல் தங்க வைத்த, அதில் டைட்டில் வின்னராக ஜெயிப்பவர்களுக்கு ரூ. 50 லட்சம் வரை பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
கடந்தாண்டு 2023ல் பிக்பாஸ் டைட்டில் வின்னராக, சீரியல் நடிகை அர்ச்சனா வெற்றி பெற்றார். பலரும் நடிகை விசித்ரா தான் வின்னர் என எதிர்பார்த்த நிலையில், அர்ச்சனா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதே பிக்பாஸ் நிகழ்ச்சியின் தாரக மந்திரம்.
கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தும் வெற்றிக்கரமாக சென்றுக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் நடிகர் கமல்ஹாசன். வாரத்தில் சனி, ஞாயிறு தினங்களில் மட்டுமே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த வாரம் முழுக்க நடந்த பஞ்சாயத்துகளை விசாரித்து பேசுவார்.
ஆனால் வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமை மட்டுமே கமல் பிக்பாஸ் ஷூட்டிங்கில் கலந்துக்கொள்வார். அன்று மதியம் வரை சனிக்கிழமை எபிசோடுக்கான காட்சிகளும், மதியத்துக்கு பிறகு இரவு வரை ஞாயிறு தின எபிசோடுக்கான காட்சிகளும் எடுக்கப்படும். ஆனால் பிக்பாஸ் பார்ப்பவர்களுக்கு 2 நாட்களும் கமல் பங்கேற்றதாக தோன்றும்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ. 150 கோடி வரை சம்பளமாக வழங்கப்பட்டது. எனினும் இந்த முறை 8வது சீசனில் தொகுப்பாளராக தன்னால் பங்கேற்க இயலாது. அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கனத்த இதயத்துடன் விலகிக்கொள்கிறேன் என கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டார்.
இதையடுத்து வரும் அக்டோபரில் துவங்க உள்ள பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறவர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் சிலம்பரசன், விஜய் சேதுபதி இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் இறுதி முடிவாக கமல்ஹாசன் இடத்துக்கு அடுத்து வருபவர் விஜய் சேதுபதிதான் என்பது உறுதியாகி விட்டது. கமல் போல கருத்துகளை பேசுபவர், நம்ம ஊரு ஹீரோ, மாஸ்டர் செப் இந்தியா ஆகிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே தொகுப்பாளராக பணி செய்த அனுபவம் உள்ளவர் என்பதால் விஜய் சேதுபதியை விஜய் டிவி நிர்வாகம் உறுதி செய்துவிட்டது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்.





