- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூர்யாவுக்காக அந்த விஷயத்தில் விட்டுத் தருவாரா விஜய் சேதுபதி? ஆனா அப்படி நடந்தா இப்படியும்...

நடிகர் சூர்யாவுக்காக அந்த விஷயத்தில் விட்டுத் தருவாரா விஜய் சேதுபதி? ஆனா அப்படி நடந்தா இப்படியும் பேசுவாங்களே? – குழப்பத்தில் சூர்யா ரசிகர்கள்!

- Advertisement -

துவக்கத்தில் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களை அசத்தியவர் நடிகர் சூர்யா. குறிப்பாக நந்தா ஆயுத எழுத்து காக்க காக்க கஜினி ஏழாம் அறிவு சிங்கம் அயன் போன்ற படங்களில் சூர்யாவின் நடிப்பு வேற லெவலில் இருக்கும். காதல் படங்களாக இருந்தாலும், ஆக்சன் படங்களாக இருந்தாலும் தனி முத்திரை பதிப்பவர் நடிகர் சூர்யா.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தோல்வி படங்களை தந்து வருகிறார். அவர் நடித்த 12 படங்களில் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் சூரரைப் போற்று என 2 படங்கள் மட்டுமே வணிகரீதியான வெற்றிப் படங்களாக இருந்தன. மற்ற 10 படங்களும் படுதோல்வியடைந்தன. சமீபத்தில் வெளியான கங்குவா வரை பிளாப் படங்களாகவே உள்ளன.

தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் சூர்யா 44 படத்தை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். கோவையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் 3வது முறையாக வக்கீல் கேரக்டரில் சூர்யா நடிக்கிறார். நாயகி திரிஷாவும் வக்கீலாக நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் நட்டி, லப்பர் பந்து நடிகை சுவாசிகா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். கோவையில் உள்ள தமிழ்நாடு அக்ரிகல்சர் யுனிவர்சிடியில் இந்த ஷூட்டிங் கோவில் செட் போட்டு நடந்து வருகிறது. விஜயிடம் சொல்லி, அவர் நடிக்க மறுத்த நிலையில் அந்த கதையில்தான் சூர்யா நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க உள்ளதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது. இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கொள்கை முடிவு எடுத்திருந்த நிலையில், விஜய் சேதுபதியை இந்த படத்தில் வில்லனாக நடிக்க அழைப்பு வந்துள்ளது. கணிசமான சம்பளம் தருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கேமியோ ரோல், கெஸ்ட் ரோல், வில்லன் கேரக்டர்களில் நடித்து இமேஜை கெடுத்துக்கொண்ட விஜய் சேதுபதி, மகாராஜா படத்துக்கு பிறகு இனி அந்த மாதிரி இல்லாமல் ஒன்லி ஹீரோ என்ற முடிவில் இருக்கிறார். இப்போது சூர்யாவுக்காக தன் கொள்கையை விட்டுத் தருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே வேளையில், விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்து படம் பெரிய ஹிட் ஆகிவிட்டால், விஜய் சேதுபதியால்தான் சூர்யாவுக்கு இந்த வெற்றி கிடைத்தது என்றும் அவப்பெயர் ஏற்படுமே என்று பலரும் இப்போதே பஞ்சாயத்து கிளப்பியுள்ளனர்.

சற்று முன்