- Advertisement -
Homeபொழுதுபோக்குமகாராஜா திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி இருக்கும் விஜய் சேதுபதி... தனுஷ் பட ஹீரோயினுடன்...

மகாராஜா திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி இருக்கும் விஜய் சேதுபதி… தனுஷ் பட ஹீரோயினுடன் ஜோடி சேர்வதால் எகிறும் எதிர்பார்ப்பு…

- Advertisement -

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக வெளியான மகாராஜா, இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. குரங்கு பொம்மை படத்தை இயக்கியிருந்த நித்திலன் சுவாமிநாதன்தான் இந்த படத்தை எடுத்திருந்தார். இதில் அனுராக் காஷ்யப், நட்டி, அருள்தாஸ், அபிராமி உள்பட ஏராளமானோர் நடித்திருந்தனர்.

 

- Advertisement -

குறிப்பாக பாய்ஸ் படத்தில் நடித்த மணிகண்டன் மற்றும் சிங்கம் புலிக்கு இதில் மிக முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. கிரைம் திரில்லர் பாணியில், நான் லீனியர் திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருந்தது. வழக்கம் போல தனது நடிப்பில், பின்னி பெடலை எடுத்திருந்தார் நடிகர் விஜய் சேதுபதி.

 

- Advertisement -

இந்தத் திரைப்படம் தற்போது 100 கோடி ரூபாய் வசூலை தாண்டி தொட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கும் சென்று படக்குழுவினர், மகாராஜா தொடர்பான விழாவில் பங்கேற்றனர். கிட்டத்தட்ட தொடர் தோல்விகளை கொடுத்து வந்த விஜய் சேதுபதிக்கு இந்த திரைப்படம் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

 

இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி அடுத்ததாக ட்ரெயின் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது க்ரைம் திரில்லர் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்கு மிஷ்கின்தான் இயக்குனர். ஆனால் படம் குறித்த அறிவிப்போடு நிற்கிறது அதன் பிறகு எந்த ஒரு அப்டேட் வெளியாகவில்லை. இருப்பினும் இதன் சூட்டிங் பணிகளை மிஸ்கின் முடித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதேபோல் மிஷ்கின் இயக்கத்தில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்திலும் முக்கியமான ரோலில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். ஆண்ட்ரியா தான் இதில் கதாநாயகி. ஆனால் இந்த திரைப்படமும், எந்த ஒரு தகவலும் இல்லாமல் கிடப்பில் இருக்கிறது.

இதனிடையே, விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் பாண்டியராஜுடன் கைகோர்த்துள்ளார். சத்தியஜோதி பிலிம்ஸ் இதனை தயாரிக்கிறது. விஜய் சேதுபதியின் திரை உலக பயணத்திலேயே இந்த திரைப்படம் மிக பிரம்மாண்ட முறையில் உருவாக இருக்கிறதாம். படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்