- Advertisement -
Homeபொழுதுபோக்குகேம் சேஞ்சர் ஹீரோ ராம்சரணுடன் நடிக்க மறுத்தது ஏன்? நடிகர் விஜய் சேதுபதி சொன்ன அதிரடி...

கேம் சேஞ்சர் ஹீரோ ராம்சரணுடன் நடிக்க மறுத்தது ஏன்? நடிகர் விஜய் சேதுபதி சொன்ன அதிரடி பதில் – இப்படி ஓப்பனா பேசிட்டாரே என ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் தெலுங்கு பட நடிகர் ராம்சரண் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கேம் சேஞ்சர் படம் வருகிற ஜனவரி 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. தமிழ்நாட்டில் வணங்கான், விடாமுயற்சி படங்களுடன் இந்த படமும் வெளியாகிறது.

கேம் சேஞ்சர் படத்தில் நாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். இந்தியன் 2 தோல்விக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவரது நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை 2 படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. முதல் மற்றும் 2ம் பாகங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

முதல் பாகத்தில் நடிகர் சூரி கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்த வெற்றிமாறன். இந்த 2ம் பாகத்தில் விஜய் சேதுபதி கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. வாத்தியார் பெருமாள் என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி இந்த படத்தில் வாழ்ந்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியார் நடித்திருக்கிறார்.

- Advertisement -

வருகிற 20ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், விடுதலை 2 படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்று வருகிறார். தெலுங்கு வெர்சனில் வெளியாகும் விடுதலை 2 படத்தின் பிரமோசனுக்காக விஜய் சேதுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராம்சரண் நடிக்கும் அவரது 16வது படத்தில் நீங்கள் நடிக்க மறுத்தது ஏன் என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

அப்போது பதிலளித்த விஜய் சேதுபதி, அந்த படத்தில் நடிக்க முதலில் எனக்கு நேரம் இல்லை. ஆனால் நான் கதைகளை கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன். சில சமயம் கதைகள் நன்றாக இருக்கிறது. ஆனால் என்னுடைய கேரக்டர் வலுவாக இருப்பதில்லை என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் ராம்சரண் படத்தில் நடிக்க கேரக்டர் வலுவாக இல்லை என்பதே காரணம் என்பதை வெளிப்படையாக பேசியிருக்கிறார் விஜய் சேதுபதி.

- Advertisement -

சற்று முன்