- Advertisement -
Homeபொழுதுபோக்குதேடி வரும் வாய்ப்புகளை வேண்டுமென்றே தவிர்த்து வரும் விஜய் சேதுபதி, அப்படி என்னதான் பிளான் வச்சிருக்காரோ?

தேடி வரும் வாய்ப்புகளை வேண்டுமென்றே தவிர்த்து வரும் விஜய் சேதுபதி, அப்படி என்னதான் பிளான் வச்சிருக்காரோ?

- Advertisement -

விஜய் சேதுபதி தற்போது இந்திய சினிமாவின் பிசியான நடிகராக வலம் வருகிறார். ஹிந்தியில் “மெர்ரி கிருஸ்துமஸ்”, “மும்பைக்கார்”, “ஜவான்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, “காந்தி டாக்ஸ்” என்ற மௌன திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் வில்லனாகவும் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

விஜய் சேதுபதி சமீப காலமாக ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. ஆனால் அவர் வில்லனாக நடித்தால் அந்த படம் மாஸ் ஹிட் ஆகிவிடுகிறது. சமீபத்தில் கூட அவர் வில்லனாக நடித்த “விக்ரம்” திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. தற்போது ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

- Advertisement -

ரசிகர்கள் விஜய் சேதுபதியை டெரிஃபிக் வில்லனாக மிகவும் ரசிக்கின்றனர். இதுதான் அவர் வில்லனாக நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதியும் தனது இமேஜ்ஜை பற்றி எல்லாம் கவலைப்படாமல் சகட்டு மேனிக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி தற்போது வேன்டும் என்றே ஹீரோ வாய்ப்புகளை தவிர்த்து வருவதாக ஒரு தகவல் வெளிவருகிறது. அதாவது இனி வரும் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ்கள் வாங்கியுள்ளாராம். அதே போல் யாராவது அவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்கவேண்டும் என்று வந்தால் அவர்களை திருப்பி அனுப்பிவிடுகிறாராம். இனிமேல் முழு மூச்சாக ஒரு வில்லன் நடிகராகவே விஜய் சேதுபதி களமிறங்க உள்ளாராம். இவ்வாறு ஒரு தகவல் இணையத்தில் வலம் வருகிறது.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்