- Advertisement -
Homeபொழுதுபோக்குஹீரோவாக களமிறங்கும் விஜய் சேதுபதியின் மகன், டைரக்டர் யார்ன்னு தெரிஞ்சா அசந்திடுவீங்க

ஹீரோவாக களமிறங்கும் விஜய் சேதுபதியின் மகன், டைரக்டர் யார்ன்னு தெரிஞ்சா அசந்திடுவீங்க

- Advertisement -

ஒரு நடிகரின் வாரிசோ அல்லது ஒரு இயக்குனரின் வாரிசோ ஹீரோவாக அறிமுகமாவது என்பது சினிமாத்துறையில் காலம் காலமாக நடைபெறும் ஒன்றுதான். அந்த வகையில் விஜய், சூர்யா, பிரசாந்த், துருவ் விக்ரம் போன்ற பலரையும் நாம் எடுத்துக்காட்டாக கூறலாம். இந்த வரிசையில் தற்போது விஜய் சேதுபதியின் மகனும் ஹீரோவாக களமிறங்கவுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது ஹிந்தியிலும் மிக பிசியாக வலம் வரும் நடிகராக உருவாகியுள்ளார் விஜய் சேதுபதி. தற்போது அவரது நடிப்பில் தமிழில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற திரைப்படம் வெளிவந்தது. மேலும் ஹிந்தியில் “ஃபர்சி” என்ற வெப் சீரீஸில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஹிந்தியில் தற்போது “மெர்ரி கிருஸ்துமஸ்”, “மும்பைக்கார்”, “ஜவான்” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதே போல் “காந்தி டாக்ஸ்” என்ற மௌன திரைப்படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இவ்வாறு இந்திய சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதியும் ஹீரோவாக களமிறங்கவுள்ளாராம்.

விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி இதற்கு முன் “சிந்துபாத்”, “நானும் ரவுடிதான்” ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து “நடு சென்டர்” என்ற வெப் சீரீஸிலும் அவர் நடித்துள்ளார். இந்த நிலையில்தான் தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் ஹீரோவாக களமிறங்கவுள்ளாராம்.

ஸ்டன்ட் இயக்குனர் அனல் அரசு ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். அந்த திரைப்படத்தில்தான் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்று மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

சற்று முன்