- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் மனைவியிடம் நிறைய பொய் சொன்னேன் ஏமாத்தினேன் வேற வழியில்லே - நடிகர் பிரகாஷ் ராஜிடம்...

என் மனைவியிடம் நிறைய பொய் சொன்னேன் ஏமாத்தினேன் வேற வழியில்லே – நடிகர் பிரகாஷ் ராஜிடம் இப்படி ஓபனாக பேசியது நம்ம செல்வன் விஜய் சேதுபதி தாங்க!

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி இப்போது மக்கள் செல்வனாக ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி நடிகராக இருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் துணை நடிகராக சினிமாவில் காலடி பதித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியவர். இப்போதும் தனது கடந்த காலத்தை மறக்காமல் இருப்பவர்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற விஜய் சேதுபதி கூறியதாவது, நான் சினிமாவுக்குள் வரும்போது நான் ஒரு ஜீரோ என்பது எனக்கு நன்றாக தெரியும். ஒரு படத்தை பார்த்து ஒபீனியன் கூட எனக்கு சொல்லத் தெரியாது. அதனால் ஏற்பட்ட அவமானங்களும் அசிங்கங்களும் ஆமா நான் முட்டாள்தான். அதுக்கு இதுதான் கிடைக்கும் என்று நல்லாவே தெரியும்.

- Advertisement -

என் பிரண்ட் ஒருத்தன் சொல்வான், உனக்கு என்ன தெரியுமுன்னு சினிமாவுக்கு போறே, டான்ஸ் பண்ண தெரியுமா, பைட் பண்ண தெரியுமா என்று கேட்பான். ஆனா எனக்கு எதுவும் தெரியாது மாமா, ஆனா 40 வயசுக்குள்ள ஒரு சீரியலில் நான் தலை காட்டுகிறேனா இல்லையா பார் என்று சொல்வேன்.

அப்படித்தான் வந்தேன். போரடிக்குது அடுத்தகட்டத்துக்கு லைப் போக மாட்டீங்குது. போராட்டமாதான் இருக்குது. இன்னும் முடியலே. எல்லாரும் சிரிப்பீங்கன்னு தெரியும். ஆனா நான் கண்டிப்பா ட்ரை பண்ணதான் போறேன் என்று அவனிடம் சொன்னேன்.

- Advertisement -

அப்புறம் என் மனைவி ரொம்ப பயந்தாங்க. நிறைய பொய் சொன்னேன். ஏமாத்தினேன். வேற வழியில்லை. எனக்கு கல்யாணமாகி அவ கன்சீவ் ஆகிட்டாள். லைப்ல எனக்கு 5 வருஷம்தான் எனக்கு டைம் இருக்கு. என் குழந்தை ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்டா அப்புறம் எனக்கு லைப்ல டைமே கிடையாது. அந்த ரெஸ்பான்ஸ் வேணும்.

இந்த 5 வருஷத்தை விட்டா என் லைப்ல அப்புறம் கேப்பே கிடையாது. அதனால் என்ன ஆனாலும் சரி, என்ன விஷயம் நடந்தாலும் சரி லைப்ல ட்ரை பண்ணுவோம். 50 வயசு ஆனாலும் கூட அப்போ 5 வருஷம் நாம ட்ரை பண்ணினோம் என்ற நம்பிக்கை இருக்கும் என்று அந்த நேர்காணலில் நடிகர் பிரகாஷ் ராஜிடம் விஜய் சேதுபதி பேசியிருக்கும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்