- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்தடுத்த அதிரடி காட்டி மிரட்டும் ஜெயம் ரவி, மனைவி பிரிவதாக முதல் அறிவிப்பு, அடுத்து விவகாரத்து...

அடுத்தடுத்த அதிரடி காட்டி மிரட்டும் ஜெயம் ரவி, மனைவி பிரிவதாக முதல் அறிவிப்பு, அடுத்து விவகாரத்து கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல், இப்போது போலீசில் புகார் – என்ன பாஸ் இதெல்லாம்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஜெயம்ரவி. பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் ஜெயம்ரவி. அவர் நடித்த சில படங்கள் கடந்த சில ஆண்டுகளாக வெளியான நிலையில், பெரிய அளவில் அந்த படங்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. குறிப்பாக அகிலன், இறைவன், சைரன் 108 போன்ற படங்கள் பலத்த தோல்வியை சந்தித்தன.

அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர உள்ள பிரதர் மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் பெரிய வெற்றி படங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ஜெயம்ரவி அறிக்கை ஒன்றின் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

அதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனைவியை விவாகரத்து செய்ய மனுதாக்கல் செய்தார். ஆனால் தன்னிடம் இது பற்றி எதுவுமே கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக முடிவெடுத்து தன்னை பிரிவதாகவும், விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி கூறி இருந்தார்.

ஆனால் ஏற்கனவே இரண்டு முறை ஆர்த்திக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பிய பிறகுதான் ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்ததாகவும் எல்லாமே ஆர்த்திக்கு தெரியும், இப்போது தெரியாது என்று கூறுகிறார். கோர்ட் விசாரணையின் போது அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்றும் ஜெயம் ரவி கூறியிருந்தார். இதுவும் தமிழ் சினிமா வட்டாரத்தில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் வைரலானது.

- Advertisement -

ஏனெனில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – தனுஷ், சைந்தவி – ஜிவி பிரகாஷ் குமார் என நட்சத்திர ஜோடிகள் பிரிந்து வரும் தற்போதை நிலையில், தற்போது அந்த வரிசையில் ஜெயம் ரவி ஆர்த்தி பிரிவு என்பதும் பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. ஏனெனில் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் கல்லூரியில் படிக்கும் காலத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 2009ம் ஆண்டில் இவர்களது திருமணம் நடந்தது. வளர்ந்த பிள்ளைகள் உள்ளனர். மேலும் ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார், திரைப்பட தயாரிப்பாளர் என்ற முறையில் ஜெயம் ரவி நடித்த பல படங்களை அவர் தயாரித்திருக்கிறார்.

மனைவி ஆர்த்தியை பிரிவதாக முதலில் அறிவித்த ஜெயம் ரவி, கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்து அதிரடி காட்டினார். தற்போது சென்னை அடையாறு துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். அதில் சென்னை ஈசிஆர் ரோட்டில் உள்ள ஆர்த்தியின் வீட்டிலிருந்து நான் வெளியே வந்து விட்ட நிலையில், என்னுடைய உடைமைகள் அந்த வீட்டுக்குள் உள்ளன. அவற்றை மீட்டுத் தரும்படி போலீசாரிடம் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். மனைவி இருக்கும் வீட்டுக்கு செல்லக் கூட விரும்பாமல், அங்குள்ள தனது உடைமைகளை போலீசார் மூலம் மீட்டுத் தரும்படி அவர் கேட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்