நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அவரது 50வது படம் மகாராஜா, கடந்தாண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் டைரக்ட் செய்திருந்தார். படம் மாபெரும் வெற்றி பெற்று ரூ. 100 கோடி வசூல் சாதனை புரிந்தது.
சீனாவில் வெளியான மகாராஜா படம் அங்கும் ரூ. 90 கோடி வசூலித்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 2 கோடி பார்வையாளர்கள் பார்த்த படமாகவும் மகாராஜா இருந்தது. அந்தளவுக்கு மகாராஜா படம் மிகப்பெரிய வரவேற்பை அங்கீகாரத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றது என்றால் அது மிகையல்ல. அந்தளவுக்கு படம் நேர்த்தியான ஒரு சிறப்பான படமாக இருந்தது.
மகாராஜா படத்துக்கு பிறகு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்த படம் கோவையில் இருந்து சென்னை வரும் ரயிலில் நடக்க சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பின் வில்லனாக நடிகர் நாசர் நடித்திருக்கிறார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் பரோட்டா மாஸ்டராக விஜய் சேதுபதி நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இந்த படத்தில் நித்யா மேனன் நாயகியாக நடித்திருக்கிறார். திருநெல்வேலி தென்காசி குற்றாலம் தேனி மதுரை திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க வந்த ஆரம்பத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை இயக்கியவர் பாலாஜி தரணிதரன். இவரது இயக்கத்தில் சீதக்காதி என்ற இயக்கத்திலும் நடிகர் விஜய் சேதுபதி பிறகு நடித்திருந்தார். இப்போது மீண்டும் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதிய படத்தில் நடிக்கிறார்.
இயக்குனர் அட்லி சினிமா தயாரிப்பாளராகவும் உள்ளார். அவரது ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. மார்ச் 2வது வாரத்தில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழில் வெளியான தெறி படத்தை இந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்குனர் அட்லி தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





