- Advertisement -
Homeபொழுதுபோக்கு7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் இப்படித்தான் இருக்கும்... காதல் காவியத்தின் கதையை கசிய...

7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் இப்படித்தான் இருக்கும்… காதல் காவியத்தின் கதையை கசிய விட்ட செல்வராகவன்…

- Advertisement -

காதல் திரைப்படம் என்றாலும் சரி, ஆக்சன் திரைப்படம் என்றாலும் சரி சும்மா அசால்ட் ஆக டீல் செய்வார் இயக்குனர் செல்வராகவன். சொல்லப்போனால் 90ஸ் கிட்ஸ் களின் ஆதர்சன இயக்குனர் அவர்தான் என்று அடித்துக் கூறலாம். அந்த அளவுக்கு அவருக்கு என தனி ரசிகர் பட்டாளம் இப்போதும் உள்ளது. இதற்குக் காரணம் செல்வராகவனின் அசத்தலான திரைப்படங்கள்தான்.

காதல் கொண்டேன் திரைப்படம் செல்வராகவன் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே கூறலாம். தனது தம்பி தனுஷை வைத்து அவர் அந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் திரைப்படங்கள் வந்திருக்கலாம், ஆனால் அது எல்லாம் காதல் கொண்டேன் ஆக முடியாது என்பதுதான் இங்கு பலரது பேச்சு.

- Advertisement -

ஒரு ஆணின் காதலை மிகவும் வலியோடும், உணர்ச்சிப்பூர்வமாகவும் அந்த திரைப்படத்தில் கூறியிருப்பார் செல்வராகவன். இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு மற்றொரு பக்கபலமாக அமைந்தது பாடல்கள் தான். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான அத்தனை பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன.

இனி இப்படி ஒரு திரைப்படத்தை செல்வராகவனால் எடுக்க முடியாது என்று கூறியிருந்த வேளையில், அடுத்ததாக அவர் மீண்டும் ஒரு காதல் கதையை தொட்டது தான் செவன் ஜி ரெயின்போ காலனி. இங்கு இருப்பவர்களுக்கு மிகவும் பிடித்த காதல் திரைப்படம் எது என்றால் பலருக்கும் முதல் தேர்வு 7ஜி ரெயின்போ காலனி ஆகத்தான் இருக்கும்.

- Advertisement -

இதற்கு மிக முக்கிய காரணம் அந்த திரைப்படத்தில் மனதை உறைய வைக்கும் கிளைமாக்ஸ் காட்சிதான். வெட்டித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் இளைஞன், தனது காதலியின் மூலம் பொறுப்பை உணர்ந்து அடுத்த கட்டத்திற்கு செல்கிறான். அந்த சமயத்தில், அவனது கண்முன்னே காதலி விபத்தில் மரணம் அடைகிறாள். இப்படி ஒரு லைனை வைத்துவிட்டு மிகப் பிரமாதமாக அந்த கதையைக் கூறி இருப்பார் இயக்குனர் செல்வராகவன்.

அதில் நடித்த ரவி கிருஷ்ணாவை வைத்து, தற்போது இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இது குறித்து பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கும் செல்வராகவன், படத்தின் 50 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. பத்து வருடங்கள் கழித்து கதிரின் வாழ்க்கையில் என்னென்ன நடக்கின்றன என்பதை தான் இந்த திரைப்படம் கூறும். மிக அமைதியாக சூட்டிங் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்