சிலம்பரசன் நடித்த “பத்து தல” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி வெளியானது. அதன் பின் அவர் “கொரோனா குமார்” என்ற திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆனதாக கூறப்பட்டது. ஆனால் அத்திரைப்படத்தின் இயக்குனரான கோகுலுக்கும் சிம்புவுக்கும் சில மனஸ்தாபங்கள் ஏற்பட அத்திரைப்படத்தில் இருந்து சிம்பு விலகினார்.

அதனை தொடர்ந்து சிம்பு, கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளிவந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து “கொரோனா குமார்” திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ், “சிம்பு தன்னிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு தன்னுடைய திரைப்படத்தில் நடித்துக்கொடுக்காமல் அடுத்த படத்திற்கு சென்றுவிட்டார்” என்று புகார் கூறினார்.
இந்த புகாரை தொடர்ந்து சிம்புவை குறித்த பேச்சுக்கள் பல அடிபட்டன. மேலும் தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்புவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. எனினும் இது போன்ற பிரச்சனைகள் எல்லாம் தற்போது பேசி முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

எனினும் தேசிங்கு பெரியசாமி சிம்புவை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. “பத்து தல” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளிவந்தாலும் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்ற ஆண்டே முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக சிம்பு ஷூட்டிங்கே போகாமல் இருக்கிறாராம்.
சிம்பு சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவின் மீது ஈடுபாடு காட்டாமலே இருந்தார். அவர் படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் என்று பல புகார்கள் எழுந்தன. மேலும் அவரது உடல் எடையும் கூடியது. சிம்புவின் கெரியரே முடிந்தது என்று கூட பலர் கூறினார்கள். ஆனால் அந்த விமர்சனங்களை எல்லாம் உடைத்து எறியும் வகையில் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் கம் பேக் கொடுத்தார் சிம்பு. இந்த நிலையில் தற்போது ஏழு மாதங்களாக சிம்பு ஷூட்டிங்கே போகாதது ரசிகர்கள் பலருக்கும் கவலையை அளித்துள்ளது.





