இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்தாண்டில் வெளியாக மாபெரும் வெற்றியை பெற்ற படம் விடுதலை. இந்த படத்தில் காமெடி நடிகர் சூரி, ஹீரோவாக நடித்திருந்தார். போலீஸ் கான்டஸ்டபிள் குமரேசன் என்ற கேரக்டரில் படம் முழுக்க போலீஸ் ஜீப் டிரைவராக அவரது நடிப்பு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த படத்தில் சூரியின் நடிப்பில், முந்தைய அவரது படங்களில் அவர் காமெடி நடிகர் என்ற எண்ணமே சிறிதும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஏற்படாத வகையில், அவரை நாயகனாக இயக்கியிருந்தார் வெற்றிமாறன். சூரிக்கு ஜோடியாக பவானிஸ்ரீ நடித்திருந்தார். இவர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமாரின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பாகமாக வெளியான விடுதலை படத்தின் 2ம் பாகம், கடந்தாண்டிலேயே ஆறு மாதங்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், 20 மாதங்களுக்கு மேல் படப்பிடிப்பை நீடித்து விட்டார் இயக்குனர் வெற்றிமாறன். அதனால் விடாமுயற்சி, விடுதலை 2 என 2 படங்களுமே காலதாமதம் ஆனதால் ரசிகர்கள் நொந்து போய்விட்டனர்.
இந்த சூழலில் நாளை மறுதினம் 20ம் தேதி விடுதலை 2 படம் ரிலீஸாக உள்ளது. முதல் பாகத்தை போலவே 2ம் பாகத்திலும் இசையில் தனி ராஜ்ஜியமே நடத்தி காட்டியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. குறிப்பாக தெனம் தெனமும் உன் நெனப்பு என்ற பாடலை அவரே எழுதி பாடி இசையமைத்திருப்பது, அந்த பாடல் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் விடுதலை முதல் பாகத்தை பொருத்த வரை படம் முழுக்க சூரியே நடித்திருந்தார். குறிப்பாக 4 காட்சிகளில் மட்டுமே விஜய் சேதுபதி நடித்திருந்தார். ஆனால் படத்தில் அதிக கவனம் பெற்றது விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியார் கேரக்டர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் விடுதலை 2ம் பாகத்தில் விஜய் சேதுபதிதான் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் வருவார். அவரது கேரக்டர்தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அதனால் விடுதலை 2 பாகத்தை பொருத்த வரை ஹீரோ விஜய் சேதுபதிதான். சூரிக்கு அதிக முக்கியத்துவம் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் மஞ்சுவாரியர், பிளாஷ்பேக் காட்சிகள் என விஜய் சேதுபதிக்கு வெற்றிமாறன் இந்த முறை விஜய் சேதுபதி கேரக்டரை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





