கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது லியோ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பிரீ பிசினஸே 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படி தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் ஆகப்பெரும் வசூல் சக்கரவர்த்தியாக விஜய் திகழ்கிறார்.
இவரது மகன் ஜேசன் சஞ்சய் சமீபத்தில் இயக்குனராக அறிமுகம் ஆவதாக அறிவிக்கப்பட்டது. லைகா நிறுவனம் இந்தத் திரைப்படத்தை தயாரிக்கிறது. சஞ்சய் கூறிய கதை வித்தியாசமான வகையில் புதுமையாக இருந்ததாகவும், அதனாலேயே இந்தப் படத்தை தயாரிக்க நாங்கள் ஒப்புக் கொண்டதாகவும் லைகா நிறுவனத்தைச் சேர்ந்த சுபாஷ்கரன் தெரிவித்தார்.
இந்த நடைமுறைகள் அனைத்தும் விஜய்க்கு தெரியாமல் தான் நடந்திருக்கிறதாம். விஜய்யின் உறவினரான சஞ்சீவ் என்பவர் திரைத்துறையில் இயக்குனராக இருந்து வருகிறார். இவரிடம்தான் தனது கதையை சொல்லி இருக்கிறார் ஜேசன் சஞ்சய். உடனடியாக சஞ்சீவ், லைகா நிறுவனத்தில் சேர்ந்த தமிழ் குமரனிடம் பேசி இருக்கிறார். அதன்படி சஞ்சய்யை அழைத்த சுபாஸ்கரன், படம் எடுப்பதற்கான ஒப்பந்தத்தை போட்டு இருக்கிறார். இவை அனைத்தும் விஜய்க்கு தெரியாமல்தான் நடந்திருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க, தனது மகனை நடிகனாக்க வேண்டும் என்ற ஆசையில்தான் இருந்தாராம் விஜய். இது தொடர்பாக பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம் விஜய் கதை கேட்க, அது பிடித்துப் போனதால் சஞ்சய்யை நடிக்குமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது மகனோ தனக்கு படத்தை இயக்குவதிலேயே ஆர்வம் இருப்பதாக கூறி பின்வாங்கியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த சம்பவம் நடைபெற, இப்போது இயக்குனராகி தந்தையிடம் சொன்ன வாக்கை காப்பாற்றி இருக்கிறார்.
இதனிடையே இன்ஸ்டாகிராமில், சஞ்சய் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ஸ்டோரி இப்போது வைரலாகி வருகிறது. அதில் அஜித்தை பற்றி ஒரு வார்த்தை கூறுங்கள் என ஒருவர் கேட்க, கெத்து என பதிலளித்திருக்கிறார் ஜேசன் சஞ்சய். தனது தந்தையை தவிர்த்து பிடித்த ஹீரோ யார் என்று இன்னொருவர் கேள்வி கேட்க, தல அஜித் மற்றும் விஜய் சேதுபதி என்று அவர் கூறியிருக்கிறார்.
அஜித்தின் பிரியாணியை ஒரு முறை சுவைத்ததாகவும் சஞ்சய் தெரிவித்துள்ளார். அப்பாவை தவிர்த்து தல அஜித் மற்றும் விஜய் சேதுபதியை இயக்குவதற்கு ஆசைப்படுவதாகவும் சஞ்சய் கூறியிருக்கிறார். இது சில மாதங்களுக்கு முன்பே அவர் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி என்றாலும், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





