- Advertisement -
Homeபொழுதுபோக்குகுழந்தையாக மாறிப்போன தளபதி விஜய்... ரஷ்ய நாட்டின் வீதியில் விஜய் விளையாடும் வீடியோ வைரல்...

குழந்தையாக மாறிப்போன தளபதி விஜய்… ரஷ்ய நாட்டின் வீதியில் விஜய் விளையாடும் வீடியோ வைரல்…

- Advertisement -

சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. அங்கிருந்து தனது இயக்குனர் பயணத்தை தொடங்கிய அவர், பல்வேறு வெற்றி திரைப்படங்களைக் கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். குறிப்பாக, அவரது இயக்கத்தில் வெளியான மங்காத்தா பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.

வெங்கட் பிரபுவிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பாராத அஜித் ரசிகர்கள், அவரை தூக்கி வைத்துக் கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து, பிரியாணி மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்த வெங்கட் பிரபு, அடுத்ததாக மாநாடு படத்தை இயக்கி மீண்டும் ஒரு பிளாக் பஸ்டரை பதிவு செய்தார்.

- Advertisement -

இப்படியான சூழலில் தற்போது வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைந்து இருக்கிறார். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என இந்த திரைப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் இதனை கோட் என்று சுருக்கி அழைக்கிறார்கள். இதில் ஏராளமான நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.

பிரசாந்த் பிரபுதேவா மோகன் அஜ்மல் வைபவ் சினேகா மீனாட்சி சவுத்ரி லைலா என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. டைம் டிராவலை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதன் சூட்டிங் தொடங்கிய நிலையில், முழு வீச்சாக படப்பிடிப்பை எடுத்து வருகிறார் வெங்கட் பிரபு.

- Advertisement -

சென்னை, தாய்லாந்து, துருக்கி, புதுச்சேரி, திருவனந்தபுரம் என ஏராளமான பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கிறார். அது தந்தை மகன் கதாபாத்திரம் தான் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல் போஸ்டரை ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது. படத்தில் ஒரு பாடலுக்கும் திரிஷா நடனமாடி இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக, கோட் படக்குழு ரஷ்யா விரைந்துள்ளது. அங்கு முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு, வி எஃப் எக்ஸ் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரசிக்க நாட்டிற்கு சென்றிருக்கும் விஜய், அங்குள்ள வீதியில் ஸ்கேட்டிங் செய்யும் வீடியோ வெளியாகி இருக்கிறது. இதனைப் பலரும் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். மேலும் அதில் விஜயின் லுக் நன்றாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்